ஐக்கியத்தின் அடிப்படை Long Beach, California, USA 61-0214 1சிறிது நேரம் நாம் தொடர்ந்து நின்று, அப்படியே நின்ற வண்ணமாக நாம் ஜெபம் செய்வோம். உங்களில் யாருக்காவது ஒரு விசேஷித்த விண்ணப்பம் இருக்குமானால், வெறுமனே உங்கள் கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே, இந்த இரவில் என்னுடைய விண்ணப்பத்தை நினைவுகூறும்” என்று கூறுங்கள். இங்கே இந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி தன் கரத்தை உயர்த்தியிருக்கும் இந்த பையனை கவனிக்கும் போது, இந்த இரவில் தேவன் இவனை சுகப்படுத்தும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். எனவே நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கையில், ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில் ஜெபத்தில் தரித்திருப்பீர்களாக. 2எங்கள் பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றியைத் தெரிவிக்கும்படிக்கு விலையேறப்பெற்ற கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் வந்திருக்கிறோம். கர்த்தாவே, நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் இன்னொரு நாள் நாங்கள் பிழைக்கும்படிக்குச் செய்த மற்றொரு நாளாக இது இருக்கிறது. அதற்காக நாங்கள் உமக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நாங்கள் உமக்குப் பிரியமில்லாத ஏதாவது செய்திருப்போமானால், நாங்கள் உம்மிடத்தில் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறோம். பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையை வாசித்து, அதின் பேரில் பேச இருக்கும்போது நீர் எங்களோடு தொடர்ந்து இருந்து, இந்த ஆராதனையை உம்முடைய கரங்களில் எடுத்துக் கொள்ளும்படி நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம். ஓ, தேவனே, பரிசுத்த ஆவியானவர் இங்கே வருவாராக. தேவனே, உம்முடைய வார்த்தையோடு கூட நாங்கள் மகத்தான மற்றும் மகிமையான ஐக்கியத்தைப் பெற்றுக் கொள்ளட்டும், இதை அளியும். ஆண்டவரே! எங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து, எங்கள் ஒவ்வொருவருடைய வேண்டுகோளுக்கும் பதிலளியும். அவர்களுடைய இருதயங்களையும் மற்றும் அவர்களுடைய தேவை என்னவென்பதையும் நீர் அறிவீர். என்னுடைய கரமும் கூட உயர்த்தப்பட்டிருக்கிறது ஆண்டவரே! மற்றும் என்னுடைய வேண்டுகோளையும் நீர் நினைவு கூரவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். வியாதியிலும், வேதனையிலும், தேவையிலும் மற்றும் (உம்மை) அழைக்கிற, உம்மிடத்தில் அழுகிற, கெஞ்சுகிற மக்களையும், மற்றும் மரித்துக் கொண்டிருக்கும் அவர்களுடைய அன்பானவர்களையும் நீர் நினைவுகூறும். ஓ, தேவனே, இது ஒரு வியாதி பிடித்த உலகம். கர்த்தராகிய இயேசுவே, வாரும். அதை எங்களிடத்திலிருந்து எடுத்துப்போட்டு, வியாதியும், துக்கமும் இல்லாத மகிமையின் தேசத்துக்கு எங்களை கொண்டு செல்லும், கர்த்தாவே. இந்த இரவில் எங்களோடும் மற்றும் எங்கள் மூலமாயும் பேசிடும். பேசுகிற உதடுகளையும், கேட்கிற செவிகளையும் விருத்தசேதனம் பண்ணும். உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும் மற்றும் அதுதாமே விசுவாசத்தைக் கட்டி எழுப்பத் தக்கதாக; அதுதாமே எங்களுடைய இருதயங்களில் விதையாக விதைக்கப்படட்டும்; இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3நீங்கள் உட்காரும் இவ்வேளையில் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. உண்மையிலேயே நாங்கள் சிலாக்கியம் பெற்றவர்களும் மற்றும் இந்த இரவில் மறுபடியும் இங்கு இருப்பதை நாங்கள் கௌரவமாக நினைக்கிறோம். இப்பொழுது நாளைக்கு கர்த்தருக்குச் சித்தமானால், நாளை பிற்பகல் இரண்டரை மணிக்கு சகோதரன் ஸ்மித்துடன் (Bro. Smith) பழைய பிஸ்கா வீட்டில் இருப்போம், நாளை பிற்பகல் இரண்டரை மணிக்கு. இப்பொழுது அங்கே நீங்கள் வரவேண்டிய வழியை அவர்கள் அறிவிப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். யாருக்காவது பழைய பிஸ்கா வீடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா? அது பிஸ்கா சபையா அல்லது பிஸ்கா வீடா என்று; நான் யூகிக்கிறேன். அது தானே...? (யாரோ ஒருவர், “இரண்டும்”, என்கிறார்). ஆம், அது வீடு மற்றும் சபை என்று அழைக்கப்படுகிறது. சகோதரன் ஸ்மித் என்னுடைய மிகவும் விலையேறப்பெற்ற நண்பர். நாங்கள் இருவருமாக சேர்ந்து தீவுகளில் மிஷனரி ஊழியம் செய்திருக்கிறோம் மற்றும் அவர் ஒரு சிறந்த கண்ணியமான கிறிஸ்தவர். அதற்கு அருகாமையில் சுற்றிலும் வசிக்கிற நீங்கள்... அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் அது இங்கே கலிபோர்னியாவில் எங்கோ இருக்கிறது. எனக்குத் தெரியாது. நான்... எனக்கு இங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்று தெரியாது. ஏதோ ஒருவிதத்தில் இங்கே சுற்றியுள்ள இடத்தைப் பற்றி அனேக தவறுகளைச் செய்துவிடுகிறேன். 4இன்றைக்கு நான் ஒரு காரியத்தைப் பெற்றுக் கொண்டேன். சகோதரன் ஆர்கன் பிரைட்டுடன் (Argan bright) சிறிது நேரம் எனக்கு ஐக்கியம் உண்டாயிருந்தது. அவர் அருமையாகப் பேசினார் என்று அவர்கள் கூறினார்கள். நான் வெளியே சென்ற போது, யாரோ ஒரு வாலிப சீமாட்டி, புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிற தன்னுடைய தகப்பனாரைச் சென்று பார்க்க வேண்டும் என்று அழுது கொண்டிருந்தாள். எனவே அப்படிப்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் எல்லாவிடத்திலும் இருக்கிறார்கள். எனவே, இந்த காலையில் நான் சகோதரன் ஆர்கன் பிரைட்டுன் ஐக்கியம் கொள்ள வேண்டியதாயிருந்தது. கிட்டத்தட்ட கோரமான தவறுகளில் ஒன்றை நான் செய்துவிட்டேன். அடுத்த சனிக்கிழமை காலை, கிறிஸ்தவ வியாபார புருஷர்கள் மத்தியில் பேச வேண்டிய கிளிஃப்டன் கேஃப்டிரியாவில் நான் நின்று கொண்டிருந்தேன், அங்கே நின்றபடி மக்கள் உள்ளே வருவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் ஒரு வாலிப சீமாட்டி உள்ளே வருவதைப் பார்த்து, அவளுக்காக நான் ஜெபிக்க அவள் விரும்புகிறாளா என்று கேட்கும்படிக்கு நான் அவளிடத்தில் செல்ல இருந்தேன். அப்பொழுது அவளுடைய கண்களில் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் நினைத்தேன். நான் தொழுநோய், கண் விழி விறைப்பு நோய், கண்ணழற்சி நோய் உள்ளவர்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்பேற்பட்ட கண்களை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. இது ஏதோ அவ்விதமான காரியமல்ல என்று நான் தெரிந்து கொண்டேன், ஏனென்றால் இன்னும் அப்படிப்பட்டவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அது, அவள் தன்னுடைய கண்களில் தடவிக் கொண்ட ஏதோ ஒருவிதமான காரியமாக இருந்தது. அது... நான் வெறுமனே... ஏதோ ஒரு நல்ல காரியம் என்னை அவளிடத்தில் போகாதபடிக்குத் தடுத்தது. ஏதோ ஒருவிதமான வெளிறிய பச்சை மஞ்சள் நிறமுள்ள மதுபானம் போல் இருந்த ஒன்றை இவ்விதமாக கீழாக தடவியிருந்தாள், மேலும் அதன் பின்னாக அடர் நீல நிறமுள்ள ஏதோ ஒன்றை தடவியிருந்தாள். எனவே பரிதாபத்துக்குரிய அக்காரியம் மரிக்கப் போகிறதென்று நான் எண்ணினேன். நான் நினைத்து... அதுதான் முதல் தடவையாக அப்படிப்பட்ட காரியத்தை நான் பார்க்கிறேன். அவர்கள் செய்வது ஏதோ ஒரு நவநாகரீக பைத்தியக்காரத்தனமாகவோ அல்லது அவ்விதமான ஏதோ ஒரு காரியமாக இருக்கலாம்? 5எனவே சுற்றுமுற்றும் பார்த்து, அதை நான் கவனித்தேன். நான் எழுந்து சென்று, “ஓ, என்னே, பரிதாபமான பெண்ணே, உன்னுடைய கண்களில் என்ன பிரச்சனை,” என்று கேட்கலாம் என்றிருந்தேன். நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறவன் என்று அவளிடத்தில் கூறலாம் என்று எண்ணினேன். ஒருவேளை அது... அது என்னவாயிருக்கும் என்று நான் அறிந்து கொள்ள விரும்பினேன். நான் ஆப்பிரிக்காவிலிருக்கும் காடுகளுக்குச் சென்றிருக்கிறேன், ஆனால் இப்படிப்பட்டவைகளை நான் ஒருபோதும் என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. அது ஒரு முகஒப்பனை (make - up) என்று நினைத்துப் பார்க்கவில்லை. உங்களுக்குத் தெரியுமா ஒப்பனை செய்வது எங்கிருந்து வருகிறதென்று? அது காட்டிலிருந்து வருகிறது. அது சரி. அது ஒரு அஞ்ஞான பழக்கமாயிருக்கிறது; அது ஒரு நாகரீகத்தைச் சேர்ந்ததல்ல. அது அஞ்ஞானிகளுடையது. ஆம், அவர்கள் தங்கள் மேலாக வர்ணத்தைப் பூசிக் கொண்டும், சேற்றை எடுத்து மற்றும்.... அது முற்றிலும் உண்மை. அது அவ்வளவு நிச்சயம். அது அங்கிருந்துதான் தோன்றினது. அது அதைச் சேர்ந்தது தான். அது ஒரு நாகரீகத்தைச் சேர்ந்ததல்ல மற்றும் அது கிறிஸ்தவத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. எனவே அதற்குப் பின்னர் அவர்கள்... நான் சென்ற ஆப்பிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, எந்த நாட்டிலும் இப்படிப்பட்டதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட ஏழு முறை இவ்வுலகத்தைச் சுற்றி வந்திருக்கிறேன், ஆனால் இப்படிப்பட்டதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால் அதை நான் கலிபோர்னியாவில் கண்டுகொள்ள முடிந்தது. நான் அவளிடத்தில் எழுந்து போகாததே நல்ல காரியம். அப்படி செய்திருப்பேனென்றால் அவள் என்னை கன்னத்தில் அறைந்திருப்பாள், அப்படி அவள் செய்திருக்கமாட்டாளா? நான் மட்டும் அவளுக்காகவும் அவளுடைய கண்களுக்காகவும் ஜெபிக்கட்டுமா என்று அவளிடத்தில் நான் கேட்டிருப்பேனென்றால், என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியும். 6ஒரு சமயம் எனக்கு நண்பனான ஒரு ஊழியக்காரர் ஹாலந்திலிருந்து (Holland) இங்கே வந்திருந்தார், அவர் ஒரு தவறை, ஏதோ அவ்விதமான ஒரு காரியத்தைச் செய்தார். ஒரு பெண் அவரை அறைந்திருக்க வேண்டும், ஆனால் என்ன ஒரு ஆச்சரியம் அவள் அதைச் செய்யவில்லை. அவர் ஒரு சாதாரண ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் என் வீட்டில் வந்து தங்கியிருந்தார். ஒரு சமயம் அவர் மார்கெட்டுக்குச் சென்றார், அவர் ஒரு நடுத்தர வயதுடைய மனிதன். அங்கே ஒரு பெண் அந்த சிறிய... அவர்களோடு நடந்து வந்தாள், வெறுமனே சிறிய... கிட்டத்தட்ட எந்த ஆடையும் அவள் அணியாமலிருந்தாள். அவர், “ஓ, சகோதரியே, சகோதரியே” என்று அவளைப் பார்த்துக் கூச்சலிட்டார். எனவே அவள் பின்னாக திரும்பி, “உங்களுக்கு என்ன ஆனது,” என்று கேட்டாள். அவர், “நீங்கள் உங்கள் பாவாடையை (skirt) போட்டுக் கொள்ள மறந்துவிட்டீர்கள்,” என்றார். அவள் உடனடியாக தன் தலையை திருப்பி, தெருவில் தொடர்ந்து நடந்து சென்றுவிட்டாள், ஒரு விதமாக... அவள் அவரை கன்னத்தில் அறையாமல் போனதே ஒரு ஆச்சரியம். ஆனால் பரிதாபமான நபர். அவர் உடனே நினைத்தார்... ஓ, என்னே! நாம் குரங்கிலிருந்து வந்தோம் என்பதை நான் விசுவாசிக்கவில்லை, ஆனால் இதைப் பார்க்கும் போது நிச்சயமாக அந்த வழிக்கு நாம் திரும்பிப் போகிறோம். 7சகோதரன் ஆர்கன் பிரைட் என்னிடத்தில் அந்த வாரத்தின் கடைசியில் சில கூட்டங்களை நடத்துவதைப் பற்றியும் மற்றும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதை நேசிக்கிறேன். அதுதான் என்னுடைய ஊழியம். நான் ஒரு பிரசங்கி அல்ல. என்னை நான் ஒரு பிரசங்கி என்று அழைத்துக் கொள்வதற்குப் போதுமான கல்வியறிவும் எனக்கு இல்லை. பள்ளிக்கூடங்கள் அல்லது வேறெதிலிருந்தும் நான் வரவில்லை, எனவே நான் வார்த்தையைப் பற்றிப் பேசுவதை அவ்வளவாய் நேசிக்கிறேன். வெறுமனே அனுபவத்தைக் கொண்டும் மற்றும் நான் படித்து அறிந்து கொண்டதையும், அதைத்தான் நான் கூறுகிறேன். ஆனால் ஜெப வரிசையை ஏற்படுத்தி, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்படுவதையே மக்கள் விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். நான் அதைச் செய்யாததற்கு காரணம் இருக்கிறது. அவர்கள் எல்லோருமாக சேர்ந்து எல்லா ஏற்பாடுகளையும்... நான் இந்த கூட்டத்தில் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்துவேன் என்று நான் இங்கே வந்தபோது அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். ஒருவரும்... நான் விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை, தரிசனங்கள் உங்களுக்கு என்ன செய்யும் என்று நான் கூற முடியாது, ஆனால் அது உங்களுக்கு என்ன செய்யும் என்று வேதாகமம் வாசிக்கிறவர்களுக்குத் தெரியும். எந்த ஒருவரும்... ஒரு ஸ்திரீயினால் நம்முடைய கர்த்தர் தொடப்பட்டபோது, அவர் தாமே கன்னியின் பிறப்பினால் பிறந்த தேவனுடைய குமாரனாயிருந்தும், அந்த ஸ்திரீ அவரைத் தொடுகிற ஒரு தரிசனத்தைக் கண்டதினிமித்தம், அவர், “நான் பெலவீனமடைந்தேன் என்று நான் உணருகிறேன்,” என்றார். ஆனால் கிருபையைக் கொண்டு இரட்சிக்கப்பட்ட எனக்கு அது என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?தானியேலுக்கு வந்த ஒரு தரிசனத்தினிமித்தம், அவன் என்ன செய்கிறான் என்று அவன் அறியாமல், கலக்கமடைந்து தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல், அநேக நாட்களுக்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். அது உங்களுக்கு என்ன செய்கிறது என்று ஒருவரும் உணர்ந்து கொள்வதில்லை, மற்றும் அதுதாமே... நீங்கள் ஒருவரை சந்திக்க... அதிலேயே சிறிது நேரம் நீங்கள் தரித்திருப்பீர்கள், மற்றும் நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது, உங்களுக்குத் தெரியவில்லை... உண்மையிலேயே உங்களுக்கு... இது ஒரு தரிசனமா? அல்லது நான் எங்கே இருக்கிறேன்? என்று உங்களுக்குத் தெரிவதில்லை, பாருங்கள்! அது தேவன் உங்களை ஆட்கொண்டிருப்பதாய் இருக்கிறது. 8இப்பொழுது அதைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை நான் உங்களிடத்தில் பேசட்டும். வேதாகமம் வாசிக்கிற ஆவிக்குரிய மக்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். கவிஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் என்று இதை நாம் இவ்விதமாக எடுத்துக் கொள்வோம். நாம் பேசத் துவங்கலாம், அது ஊக்குவிப்பதாக இருக்கும். முதலில் கவிஞர்கள் என்பதிலிருந்து நாம் துவங்குவோம். கவிஞர்கள், ஒரு உண்மையான கவிஞன் அகதூண்டுதலினால் (inspiration) கவிதைகளை எழுதுகிறான். எனக்கு நினைவுக்கு வருகிற ஒரு கவிஞனை எடுத்துக் கொள்வோம். ஸ்டீபன் ஃபாஸ்டரை (Stephen Foster) எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் இருந்த மிகவும் சிறப்பான கவிஞர்களில் அவரும் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவர் நாட்டுப்புற பாடல்களையும் மற்றும் வேறு பாடல்களையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய ஜீவிய சரிதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? இப்பொழுது இந்த பழைய கென்டக்கி இல்லம் நான் நிற்கிற இந்த இடத்திலிருந்து ஆற்றுக்கு அப்பால் இருக்கிறது. என் வீட்டிலிருந்து பதினைந்து நிமிடங்களில் என்னால் அங்கே செல்ல முடியும். அவர் கென்டக்கியில் சுற்றித் திரிந்த இடங்களையும், தோட்டங்களையும் இன்னும் அப்படிப்பட்டவைகளைக் குறித்து “என் பழமையான கென்டக்கி இல்லம்” என்பதில் எழுதினார், மற்றும் அதை எழுத பயன்படுத்திய மேஜை (desk) பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த உலகக் கண்காட்சியில் இருபத்தைந்து டாலர் மதிப்புக்கு விலை போனது. சரி, ஒவ்வொரு முறையும் ஸ்டீபன் ஃபாஸ்டர் போதுமான அகத்தூண்டுதலினால் ஏவப்படும் போது, உடனே அவர் பேனாவை எடுத்து ஒரு பாடலை எழுதுவார், பின்னர் அந்த அகத்தூண்டுதல் நீங்கினவுடன், அவர் குடிக்கச் (drunk) சென்றுவிடுவார். அது உங்களுக்குத் தெரியுமா? அவர் நிச்சயமாக அவ்விதமாகத்தான் செய்வார். ஒரு சமயம் அவர் குடிபோதையிலிருந்து முழுவதும் வெளிவந்தவுடன் தான் எங்கே இருக்கிறோம் என்று அறியாமல் ஒரு வேலைக்காரனை அழைத்து, ஒரு சவரகன் கத்தியை வாங்கி, தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். அதைப் பற்றி எப்பொழுதாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அதுதான் ஸ்டீபன் ஃபாஸ்டர். 9ஒருவேளை நீங்கள் கூறலாம், “சரி, அந்த மனுஷன் ஒரு உலகத்தான்,” என்று. நல்லது, அப்படியானால் நாம் வில்லியம் கூப்பரை (William Cooper) எடுத்துக் கொள்வோம். கொஞ்ச நாட்களுக்கு முன்னர், இங்கிலாந்தில், லண்டனிலிருக்கும் அவருடைய கல்லறை அருகில் நின்றிருந்தேன். அங்கே நான் அழுது கொண்டிருந்தேன். அவர் நரம்புத் தளர்ச்சி பாதிப்பிற்குள்ளானவர் என்று கருதப்பட்டார். ஆவியில் ஜீவிக்கிற எந்த ஒருவரும்... உலகத்துக்கு அவர்கள் ஏறக்குறைய மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். விஞ்ஞானமும் அவ்விதமாகத்தான் கூறுகிறது. வில்லியம் கூப்பர், அவர் அந்த புகழ்பெற்ற பாடலை எழுதின போது... எங்கள் சொந்த இடத்தில் இருக்கும் பாப்டிஸ்டு சபையில், இராப்போஜன ஆராதனையில் அந்த பாடலை அநேக வருடங்களாகப் பாடி வந்தோம். இம்மானுவேலின் நாளங்களிலிருந்து சிந்தப்பட்ட இரத்தத்தினால் ஒரு ஊற்றானது நிறைந்திருக்கிறது, பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி, தங்களுடைய எல்லா பாவக்கறைகளையும் நீங்கச் செய்தார்கள். நீங்கள் அதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அப்படித் தானே? அதைப் பற்றினதான வரலாற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த அகதூண்டுதல் அவரை விட்டு நீங்கின உடனே... அவர் அந்த நிலையில் இருக்கும் போது, அந்த பாடலை எழுதுவார் மற்றும் மக்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறிந்திராத அந்த உன்னத நிலையில் (ஸ்தாயியில்) அவர் இருக்கும் போது... வெறுமனே பாடுவதும், கூச்சலிடுவதும், நடனமாடுவதும், அது... இல்லை. அது ஆவியில் இருப்பதாகும், அது சரிதான், ஆனால் அது சந்தோஷத்தின் ஆவி, பாருங்கள். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அறிந்திராத அந்த நிலைக்கு நீங்கள் செல்லும்போது, பாருங்கள், அதை உங்களால் விவரித்துக் கூற முடியாது. நீங்கள்... அது அங்கு இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான். அந்த நிலையிலிருந்து அவர் வெளி வந்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும்படிக்கு நதி எங்கே இருக்கிறது என்று தேட முயன்றார். எத்தனை பேர் அந்த கதையைக் கேட்டிருக்கிறீர்கள்?நிச்சயமாக, பாருங்கள். அவர் தற்கொலை செய்து கொள்ளும்படிக்கு நதியைத் தேடி முயற்சித்தார். அப்பொழுது மிகவும் பனிமூட்டமாக இருந்தது. ஓட்டுனரால் நதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நதியின் ஆழத்துக்குள் மூழ்கும்படிக்கு அவர் சென்று கொண்டிருந்தார். அவர் இன்னுமாக அந்தப் பாடலின் தாக்கத்துக்குள்ளாக இருப்பதாக நினைத்தார். எனவே, இப்பொழுது அவர் அந்த நதியின் ஆழத்துக்குள் மூழ்கி எல்லா பாவக்கறைகளையும் தொலைத்துவிடும்படிக்கு போய்க் கொண்டிருந்தார், பாருங்கள். 10இப்பொழுது, நீங்கள் பாடல் எழுதுகிறவர்களைக் குறித்து பேசுகிறீர்கள் என்று நீங்கள் கூறலாம். சரி, இப்பொழுது நாம் வேதாகமத்துக்கு திருப்புவோம். இப்பொழுது நாம் தீர்க்கதரிசிகளைக் குறித்துப் பார்ப்போம். தீர்க்கதரிசி யோனாவை எடுத்துக் கொள்வோம், அவன் நினிவேவுக்கு போகிற வழியிலிருந்து விலகி, தர்ஷிசுக்கு போகிற வழியை எடுத்துக் கொண்டான், எனவே தேவன் அவனை திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள் இரவும் பகலும் பிழைக்கும்படி பாதுகாத்து, திரும்பவும் அவனை கர்த்தர் நினிவேவுக்கு கொண்டு போய்விட்டார். அந்த கதை உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அவனை அதற்காகவே அபிஷேகம் பண்ணியிருந்தார். எனவே அவன் அதிலிருந்து வெளிவந்தவுடன்... எனவே அவன் இந்த திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள் இரவும், பகலும் ஜெபத்தில் தரித்திருந்து, நினிவேயின் கரைக்கு வந்து; அவர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கும் இரட்டுடுத்தி மனந்திரும்புகிற அளவுக்கு அவன் அவ்வளவு வல்லமையாக பிரசங்கித்தான். அது சரிதானே? அதினிமித்தம் அந்த முழு பட்டணமும் மனந்திரும்புதலுக்குத் திரும்பினது. எனவே தெய்வீக ஊக்கம் (inspiration) அவனை விட்டு நீங்கினவுடன், அவன் ஒரு குன்றின் மேல் ஏறி, அங்கிருக்கும் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து; பாருங்கள். அந்த ஊக்கம் அவனைவிட்டு நீங்கினதும், தன்னுடைய ஜீவனை எடுத்துவிடும்படிக்கு தேவனிடத்தில் ஜெபித்தான். (அது சரிதானே?) நீங்கள் இங்கே இருக்கும் போது அதுவல்ல நீங்கள். அதிலே நீங்கள் ஒரு பெரிய வலிமை கொண்டவராக உணரலாம். ஆனால் நீங்கள் அதிலிருந்து வெளிவந்தவுடன், அவர்கள் எவ்வளவாக அதின் தாக்கத்தை சகித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. பாருங்கள். 11பாருங்கள்! தீர்க்கதரிசியாகிய எலியாவை எடுத்துக் கொள்வோம். தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தையும், தெய்வீக ஊக்கத்தையும் கொடுத்திருந்தார். ஒரு மலை மேலாகச் சென்று, அங்கே அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவனிடத்தில் கூறியிருந்தார். தேவன் அவனுக்கு எவ்விதமாக காரியத்தை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாரோ அவ்விதம் அவன் காரியத்தை செய்திருந்தான். மேலும் மூன்று வருடம் ஆறு மாதங்களுக்கு மழை பெய்யாமல் இருந்தது. அவன் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து பின்னர் உடனடியாக வானத்திலிருந்து மழையையும் வரவழைத்தான். நானூறு ஆசாரியர்களைப் பிடித்து அவனே அவர்களைக் கொன்று, நானூறு ஆசாரியர்களுக்கான தண்டனையை நிறைவேற்றினான். பின்னர் தெய்வீக தூண்டுதல் அவனைவிட்டு நீங்கினவுடன் ஒரு ஸ்திரீயின் பயமுறுத்தலினால், அவன் வனாந்திரத்திற்கு ஓடிச் சென்று, அங்கே ஒரு ஆமணக்குச் செடியின் கீழ் உட்கார்ந்து, “தேவனே! என்னுடைய ஜீவனை எடுத்துக் கொள்ளும்!” என்று முறையிட்டான். அங்கு அடுப்பில் தயாரிக்கப்பட்ட சில அப்பத்தைக் கொண்டு தேவன் அவனை போஷித்தார். பின்னர் நாற்பது நாட்கள் அவன் வனாந்திரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அதன் பின்பு எங்கோ ஓர் குகையில் ஒளிந்து கொண்டிருந்த அவனை தேவன் கண்டு பிடித்தார். அது சரிதானே? அப்பொழுது அவனுக்கு முன்பாக பலமாக வீசுகிற காற்று கடந்து சென்றது, ஆனால் தேவனோ அந்த காற்றில் இல்லை. இடிமுழக்கம் கடந்து சென்றது, அவர் இடிமுழக்கத்தில் இல்லை. அதற்குப் பிறகு சற்று நேரம் கழித்து, மெல்லிய சத்தம் அவனிடத்தில் பேசினது. மேலும் ஏன் இந்த குகைக்குள் திரும்பவும் வந்தான் என்று அறிந்து கொள்ள விரும்பினது. பாருங்கள், தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல், வனாந்திரத்தில் சுற்றித்திரிந்து, எங்கோ ஓர் குகையில் ஒளிந்திருந்த போது அவன் கண்டுபிடிக்கப்பட்டு அழைக்கப்பட்டான். இப்பொழுது தேவனுடைய குமாரன் என்றால் என்ன என்ற ஓர் எண்ணம் உங்களுக்கு உண்டாயிருக்கலாம்? 12நண்பர்களே, அந்த காரணத்தினால் தான் கிட்டத்தட்ட அது... அதை நீங்கள் உணராமலிருக்கிறீர்கள்! அன்றொரு இரவு, இங்கே நான் நின்றேன், மக்களாகிய உங்களுக்காக நான் எவ்வளவு நேரம் நிற்க முடியுமோ அவ்வளவாக நிற்க நான் முயன்றேன், ஏனெனில் சுவிசேஷத்தைக் கொண்டு அதை அவ்வளவு கடினமாக வெட்டி, மற்றும் உங்களுடைய ஸ்தாபனத்தையும் இன்னும் ஒவ்வொன்றையும் தகர்த்துப் போட்டேன். நீங்கள் கவனியுங்கள், அது உங்கள் ஸ்தாபனத்தை அல்ல, ஆனால் அவர்கள் அவ்வளவாக வழிவிலகிப் போகிற அந்த விதத்தைத்தான் அதன் பின்னர், “தேவனே, நான் அவர்களைப் புண்படுத்தியிருக்கிறேன். ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன். எனவே என்னால் எவ்வளவு நேரம் நிற்க முடியுமோ அவ்வளவு நேரம் நான் நிற்கட்டும்”, என்று நான் நினைத்தேன். அதன் பிறகு நான் இந்த பிரசங்க பீடத்தை விட்டுக் கடந்து சென்ற பிறகு, நான் ஒரு ஊழியக்காரரின் கரங்களில் தாங்கிப் பிடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டேன். நான் அங்கே... சென்றவுடன், அங்கே வெளியே யாரோ ஒரு ஸ்திரீ இருக்கும் அறைக்குள் சென்றுவிட்டேன், அங்கே இன்னும் வேறு சில மக்களும் நின்று கொண்டிருந்தார்கள். எனக்கு நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை! அதன் பின்னர் பில்லி என் கரத்தைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான். அதற்குப் பிறகு நான் அறிந்து கொண்ட விஷயம், நான் தங்கி இருந்த அந்த இடத்திற்கு அவர்கள் என்னைப் படிக்கட்டு வழியாக மேலே அழைத்துச் சென்றார்கள்! பாருங்கள்! அதன்பின் அந்த இரவு முழுவதும் என்னால் தூங்கவே முடியவில்லை! பாருங்கள், அதைக் குறித்து நான் உங்களிடத்தில் நான் கூறவில்லை. அடுத்த நாள் நான் பார்த்த ஒவ்வொன்றும்... அறையைச் சுத்தம் செய்யும்படிக்குப் பணிப்பெண் வந்தவுடன், நான் எழுந்து நின்று கொண்டேன். அவள் உள்ளே வந்தவுடன், அவளிடத்தில் என்ன தவறு இருக்கிறது என்று உடனடியாக நான் அறிந்து கொண்டேன். பின்னர் நான் வெளியே தெருவுக்கு வந்து, தெருவில் நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுது, ஒரு மனிதன் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். உடனே நான் அங்கே... முதலில் நடந்த காரியம் என்னவென்பது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது நான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் அங்கே நின்று கொண்டு, அவன் செய்த ஏதோ காரியத்தை நான் பார்த்து; அப்பொழுது அங்கேயே தெருவில், அவனிடத்தில் கூற முயற்சித்துக் கொண்டிருந்தேன், பாருங்கள்! நீங்கள் என்ன காரியத்தினூடாகக் கடந்து போகிறீர்கள் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதில்லை! பாருங்கள்! நீங்கள் வெளிப்புறத்தைத் தான் பார்க்கிறீர்கள், உள்ளுக்குள்ளாக என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரிவதில்லை! அது நீங்கள் மிக உயரத்தில், லட்சக்கணக்கான மைல்கள் உயரத்தில் இருந்து ஒவ்வொன்றும் உங்கள் கைக்கு எட்டுகிற அளவுக்கு இருப்பதுபோல நீங்கள் உணர்வதாக இருக்கிறது! பின்னர் திடீரென்று அவ்வளவு உயரத்திலிருந்து ஏதோ ஓரிடத்தில் கீழே வந்து, உங்களுக்குத் தெரியவில்லை... அதுதான் காரியம். பாருங்கள்! எனவே அந்த காரணத்தினால் தான் நாங்கள் அதை அவ்வளவு கூர்ந்து கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஒரு சமயம் நான் ஒரு கூட்டத்தில் நீண்ட நேரம் தரித்திருந்தேன். ஏனெனில் அந்த சகோதரர்கள் என்னைப் பிரசங்க பீடத்தில் மிகவும் நீண்ட நேரம் தரித்திருக்கும்படிக்கு செய்துவிட்டார்கள். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துத்தான் நான் ஊழியக்களத்திற்கு மறுபடியும் வர வேண்டியதாகிவிட்டது. 13எனவே, அதுதான் இதை கடினமாக ஆக்குகிறது. எல்லையைக் கடந்து அக்கரைக்கு வந்து, மக்களாகிய உங்களை நேருக்கு நேர் சந்திக்கு மட்டும், இதை நான் உங்களுக்கு விவரித்துக் கூற வேண்டிய அவசியமில்லை. என்னை உங்கள் சகோதரன் என்ற முறையில் என்னை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். என்னால் முடிந்த மட்டும் ஒவ்வொன்றையும் அன்பினால் உங்களுக்குச் செய்ய முயன்றிருக்கிறேன். இந்த இரவில் ஒவ்வொரு வியாதியஸ்தரையும் அழைத்து, என்னால் உன்னை சுகப்படுத்த முடியும்“, என்று கூற நான் விரும்பாமல் இருப்பேனோ? ஓ, என்னால் இங்கிருக்கும் கால்வாசி மக்களை எடுத்து, தெருவுக்குக் கொண்டுவந்து, ஹாலிவுட் மட்டும் தள்ளிக் கொண்டு... நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு இங்கிருந்து, ஹாலிவுட் மட்டும் தள்ளிக் கொண்டு போக வேண்டியிருந்தால், நான் அதைச் செய்வேன். அதை நான் நிச்சயமாகச் செய்வேன். ஆனால் போதுமான விசுவாசத்தைக் கட்டி எழுப்புகிற வேதாகமத்தை மட்டும் என்னால் எடுத்து... நீங்கள் கண்டு உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு இரண்டு காரியங்களை, பாருங்கள்... நாம் அவ்வளவாகப் பூமிக்குரியவர்களாக இருக்கிறோம். நாமெல்லோருமே. நானும் கூட, பாருங்கள், அங்கு நிற்பது இயேசு கிறிஸ்துதான் என்று உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு நாம் அவ்வளவாக பூமிக்குரியவர்களாக இருக்கிறோம்! பாருங்கள்! எனவே அந்த அபிஷேகம் வரும்போது, இங்கே இருக்கும் ஒவ்வொரு நபர்களும் எப்படிப்பட்ட பயத்தினாலும், மனச்சோர்வினாலும்... என்பதைக் கண்டுபிடித்துவிடலாம், அதுதான் காரியம், அது நீங்கள் இருதயத் துடிப்பை உணர்வதைப் போல இருக்கிறது பாருங்கள்... அது நான் அல்ல; அது அபிஷேகத்தினால் மட்டுமே வருகிறதாய் இருக்கிறது! அவ்வளவுதான், பாருங்கள்! எனவே அது நான் பெற்றிருக்கிற வரமாக, என்னையே ஆவியானவருக்கு முற்றிலும் ஒப்புக் கொடுக்கிறதாயிருக்கிறது. வழக்கமாக நான் சாப்பிடாமல் அல்லது எந்த ஒன்றையும் சாப்பிடாமலிருந்து, ஆவியானவருக்கு என்னை முற்றிலும் ஒப்புக் கொடுத்தவனாய் இருப்பேன். எனவே அவர்கள் என்னை இரவு நேரத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு, ஒருவரும் என்னிடத்தில் பேசாமலிருப்பார்கள், பாருங்கள். நான் உடனே உள்ளே வந்து; வந்த வழியே உடனடியாக வெளியே சென்றுவிடுவேன். எனவே நான் அந்த அறையில் தங்கி, அதைக் கேட்கவும் (hear) அல்லது அறிந்து கொள்ளவும் மற்றும் நான் தங்கியிருக்கும் அந்த அறையில் வெளிச்சம் நகர்வதைப் பார்க்கு மட்டும் ஜெபித்துக் கொண்டிருப்பேன். எனவே நான் தொடர்ந்து, உமக்கு நன்றி, ஆண்டவரே, நான் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே அங்கே செல்கிறேன், அது உம்முடைய மக்களுக்கு உதவி செய்யவே. எனவே, அது என்னவாயிருந்தாலும், இப்பொழுது எனக்கு உதவி செய்யும், ஆண்டவரே! மக்களுக்கு விசுவாசத்தை கொடுத்தருளும்“, என்று கூறிக் கொண்டிருப்பேன். அவ்விதமாக நான் செய்வது வழக்கம். அதுசரி. 14எனவே, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதும், அவர்கள் மேல் கைகளை வைப்பதும் என்று வரும்போது, உண்மையிலேயே, அதை நான் எப்பொழுதும் செய்வேன். அது சரிதான். இப்பொழுது, அது ஒருவகையாக இருக்கிறது. அது யூதர்கள் செய்கிற பழமையான பழக்கமாய் இருக்கிறது. மற்றும் அது அருமையானதும் கூட. அது உண்மையிலேயே பலனளிக்கிறதாய் இருக்கிறது. ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் டாமி ஆஸ்பர்ன்... டாமி ஆஸ்பர்ன், அவர் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கமாட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் மக்களுக்கு வெறுமனே வார்த்தையை மட்டும் விளக்கிக் கூறி, அதைக் கொண்டு பிசாசை பிடித்துவிடுவார். வார்த்தையைக் கொண்டு பிசாசை சரணடையச் செய்யும் அளவுக்கு அவர் ஒரு பெரிய வேதாகம வல்லுநர். அதன்பிறகு அவர்களை ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யும்படிக்குச் செய்தும் மற்றும் ஒரு ஒட்டுமொத்த ஒப்புக்கொடுத்தல் ஜெபம் செய்யும்படிக்கு செய்து, மேடையில் அவர் அமர்ந்துவிடுவார். அதன்பிறகு அந்த இரவு முழுவதும் அவர்கள் மேடைக்கு வந்து சாட்சி கூறிக் கொண்டிருப்பார்கள் என்று அவர் கூறினார். அது அவரைக் கொஞ்சம் கூட தொல்லைப்படுத்தாது. அவர்... மாட்டார். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இங்கே நான் அவரைச் சந்தித்தேன். அருமையான நபர்கரில் டாமியும் ஒருவர். டாமி ஆஸ்பர்ன் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவ கனவான். சகோதரன் டாமி ஆஸ்பர்ன், உண்மையிலேயே ஒரு இனிமையான நபர். வயது சென்ற சகோதரன் பாஸ்வர்த் மூலமாக அவர் வார்த்தையைப் பிடித்துக் கொண்டார். 15அவர் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார்... (இதை நீங்கள் அநேகமுறை படித்திருக்கிறீர்கள்). ஒரு சமயம் மேடையிலே அந்தப் பிசாசு பிடித்தவன் என்னைக் கொல்ல வரும்போது, அப்பொழுது அவர் அங்கே இருந்தார், அந்த நிகழ்வுதான் அவருடைய ஊழியத்தை துவக்கிவைத்தது. அங்கே அவன் நின்றபடி, தன்னுடைய தோள்பட்டையை நிமிர்த்தி, என்னுடைய முகத்தில் துப்பி, இன்னும் அநேக காரியங்களைச் செய்து, “நீ ஏமாற்றுக்காரன்” என்று ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் முன்பாக அப்படிக் கூறினான். அவன், “இங்கே இந்த மேடையில் நீ தேவனுடைய ஊழியக்காரனைப் போல் நடிக்கிறாய்”, என்றான். அவன் 260 பவுண்ட் (கிட்டத்தட்ட 118 கிலோ) எடையுடையவனாய் மிகவும் ஆஜானுபாகுவாய் இருந்தான். சரி, நீ என்ன பேசுகிறாய் என்பதை அறிந்திருப்பது நல்லது! இல்லையென்றால் நீ பேசாமல் இருப்பதே நல்லது! தேவன் மட்டும் பேசும்படிக்கு விட்டுவிடு. அங்கே அவர் என்னை வழிநடத்துவார் என்பதை நான் அறிந்திருந்தேன். அங்கே அரங்கத்தில் பின்னால் இருந்த ஒப்பனை அறையிலிருந்த என்னால் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்பட்ட இரண்டு போலீஸ்காரர்கள் அவனைப் பிடிக்கும்படிக்கு ஓடி வந்தார்கள். நான், அது மாம்சத்துக்கும், இரத்தத்துக்கும் சம்பந்தப்பட்ட காரியம் இல்லை. அவனை அப்படியே விட்டுவிடுங்கள்“, என்றேன். எனவே அவன் அங்கே மேலே வேகமாக வந்தான். எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுக்கு ஒரு துளி கோபம் வருமானால், நீங்கள் பிரசங்க மேடையை விட்டு போய்விடுவதே சிறந்தது. ஒரே ஒரு காரியம்தான் எந்த பிசாசையும் அல்லது எந்தவொன்றையும் ஜெயம் கொள்ளும், அது அன்பாயிருக்கிறது. எனவே நான் அவர்களை (மக்களை) நேசிக்கும் போது, அந்த ஒரு வழியில் மட்டுமே நான் எவருக்காவது உதவி செய்திட முடியும். மற்றும் என் மீது அவர்கள் செலுத்துகிற அன்பையும் என்னால் உணரமுடியும். 16இதோ இந்த மனிதன் என்னை நோக்கி வந்தபோது, நான், “இந்த பரிதாபமான நபர், இவன் என்னைக் கொல்ல வரவில்லை. பிசாசு தான் அவ்விதமாக இவனைச் செய்யும்படிக்குச் செய்கிறது. அவன் திருமணமான ஒரு மனிதனாயிருந்து, அவனுக்குப் பிள்ளைகளும் இருக்கலாம். எனக்கு விரோதமாக அவனிடத்தில் என்ன இருக்கப் போகிறது? அவன் தன்னுடைய ஜீவியத்தில் என்னை ஒருபோதும் பார்த்திருக்கக் கூட மாட்டானே”, என்று நினைத்தேன். அவன் மனநல காப்பகத்திலிருந்து வந்தவனென்றும், தெருவில் வந்த ஒரு ஊழியக்காரரின் தாடையையும், தோள்பட்டை எலும்பையும் உடைத்தவனென்றும் அறிந்து கொண்டேன். அவன் பிரசங்கிமார்களைக் கொன்றுவிட வேண்டும் என்று பிசாசு பிடித்தவனாய் இருந்தான். எனவே அவன் நடந்து வரத் துவங்கினபோது; அவனைப் பார்த்ததும் கிட்டத்தட்ட இருநூறு பிரசங்கிமார்கள் அவ்வளவு துரிதமாக மேடையிலிருந்து சிதறி ஓடினார்கள். எனவே அவன் அருகில் வந்து நின்றான். அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். அவன், “இன்றிரவு இந்த கூட்டத்தார் மத்தியில் உன்னை எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடித்து, உன் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு எலும்பையும் உடைக்கப் போகிறேன்”, என்றான். எனவே அவன் அவ்விதமாய் செய்வதற்கு அதிகமான சரீர பெலனுடையவனாய் இருந்தான். அவன் ஏறக்குறைய இருநூற்றி அறுபது பவுண்ட் எடையுடையவனாய் இருந்தான், நான் வெறுமனே நூற்றி பதினெட்டு பவுண்ட் (ஏறக்குறைய ஐம்பத்தி மூன்று கிலோ) எடையுடையவனாய் இருந்தேன். எனவே அவ்விதமாய் அவன் வந்து நின்றான். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் சரி, அவன் பரிதாபமான நபர் என்று நினைத்தேன். இப்பொழுது கவனியுங்கள், இதோ பிசாசு இந்த பெரிய அருமையான திடகாத்திரமான பண்புகள் கொண்ட மனிதனை இவ்விதமாய்ப் பிடித்து வைத்திருக்கிறான். அது பரிதாபமாக இல்லையா? 17பின்னர் நான் திரும்பி, ஒரு காரியத்தையும் கூறாமல், அமைதியாக இருந்தேன். என்னால் அதைக் கேட்க முடிந்தது... அவனிடத்தில் கூறுவதைப் பாருங்கள், அது தாமே ஆவியாயிருக்கிறது. அந்த ஆவி அவனிடத்தில் பேசினது. அது எவ்விதமாய் கிரியை செய்கிறது என்பதை ஆப்பிரிக்காவின் காடுகளிலும் இன்னும் அப்படிப்பட்ட இடங்களிலும் அதை நீங்கள் பார்க்கலாம். அதை நீங்கள் அமெரிக்கர்கள் மத்தியிலும் பார்க்கலாம். ஆனால் நீங்கள் அதை அங்கே சூனியக்காரர்கள் முன்பாக நேரிடையாகப் பார்ப்பதென்பது... எனவே அது, “இன்றிரவு நீ தேவனுடைய ஆவியினிடத்தில் சவால்விட்டதால், என்னுடைய பாதத்தில் விழுவாய்”, என்றது. அதற்கு அவன், “பாவனைக்காரனே, புல்லில் இருக்கும் பாம்பே, மாயமாலக்காரனே; நான் யார் காலில் விழுவேன் என்று உனக்கு நான் காட்டுவேன்”, என்றான். அவ்விதமாக அவன் என்னிடத்தில் நடந்து வந்து, என்னுடைய முகத்தில் துப்பினான். நான் ஒரு வார்த்தையும் கூறாமல் அமைதியாக நின்று அவனை நோக்கிப் பார்த்தேன். அவன் எனக்கு மிக நெருக்கத்தில் வந்தான். அவன் தன்னுடைய பருத்த கரத்தை பின்பக்கமாக இழுத்து, அவ்விதமாக ஓங்கி, தன்னுடைய பற்களை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருந்தான் மற்றும் அவனுடைய கண்களும் அப்படியாக பிரகாசமாயிருந்தது. அவன் என்னை அடிக்கும்படிக்கு மறுபடியும் முன்னுக்கு வந்தபோது, “நான், பிசாசே, இந்த மனிதனை விட்டு வெளியே வா”, என்றேன். அவன், “ஊ,ஊ,ஊ”, என்றபடி பின் சென்றான். அவன் இவ்விதமாகச் சுற்றிச் சுற்றி கீழே விழுந்து, என்னுடைய பாதங்களை தரையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். அவ்விடத்தில் இரண்டு ஆவிகளும் ஒன்றுக்கொன்று சவால் விட்டுக் கொண்டன. அவன் சவால்விட்டான், பாருங்கள், அதை தேவனுடைய ஆவியும் ஏற்றுக் கொண்டது. கடைசியில் அவன் என்னுடைய பாதங்களில் வந்து விழுந்தான். பின்னர் அந்த வாலிப் போலீஸ்காரர்கள் ஓடிவந்து, “அவன் மரித்துவிட்டானா?” என்று கேட்டனர். “இல்லை, ஐயா, அவன் மரிக்கவில்லை”, என்று நான் சொன்னேன். “சரி, அவன் சுகத்தைப் பெற்றுக் கொண்டானா?” நான், “இல்லை ஐயா, அவன் அந்த ஆவியை தொழுதுகொள்ளுகிறான். அவன் சுகத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை”, என்றேன். மேலும் நான், இவனை என்னுடைய பாதத்திலிருந்து உருட்டி விலக்கிவிடுங்கள், (ஏனெனில் அவன் மிகவும் கனத்தவனாயிருந்தான்)“, என்றேன். 18டாமி ஆஸ்பர்ன் அதைப் பார்த்தார், அல்லது அவருடைய மனைவி அதைப் பார்த்து, அடுத்த நாள் அவரை அழைத்து வந்திருந்தார். அவர் தன்னுடைய அறையைவிட்டு மூன்று நாளைக்கு வெளியே வராமல் அங்கேயே இருந்தார். எனவே நான் அந்த ஊழியப் பயணத்தை முடித்து வீட்டிற்குத் திரும்பினபோது, இதோ அவர்தாமே அங்கே என் வீட்டின் முன்னே காத்திருந்தார் சிறிய டாமி மற்றும் அவருடைய இரண்டு... சிறிய... அவருடைய சிறிய குழந்தை மற்றும் சிறிய பையனும் இருந்தனர். உங்களுக்குத் தெரியுமா? அவர் அவ்வளவு மனத்தளர்வுற்றவராய் இருந்து, இரண்டு அல்லது மூன்று முறை காரைச் சுற்றிச் சுற்றி வந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாம், சகோதரன் பிரான்ஹாம், எனக்கு தெய்வீக சுகமளிக்கும் வரம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”, என்றார். நான்,“கவனியுங்கள், டாமி, இவ்விதமாய் இந்த எழுப்புதல் ஆரம்பித்தவுடன், இந்த தேசத்தில் அநேக தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை நடத்துபவர்கள் எழும்புவார்கள்”, என்றேன். நான், அது பரிதாபத்துக்குரியதாக இருக்கும். எப்படியெனில் ஒரு தெய்வீக சுகமளித்தல் இல்லாமல் ஒரு கூட்டம் கூட வைக்க விரும்பாத அளவுக்கு மக்கள் இருப்பார்கள். பாருங்கள், தெய்வீக சுகமளித்தல் என்பது ஒரு சிறிய காரியம்தான். எனவே, நீங்கள் சிறிய காரியத்தைப் பெரிய காரியமாக ஆக்க முடியாது. இரட்சிப்புதான் ஆத்துமாவுக்குப் பெரிய காரியமாக இருக்கிறது. தெய்வீக சுகமளித்தல் என்பது ஒரு சிறிய காரியமே. எனவே நான், “அது இவ்விதமாக நிறைவேறும் காரணம் இயற்கைக்கு மேம்பட்ட காரியம் நிகழும்போது, எப்பொழுதுமே ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார், மோசேயின் நாட்களில் இருந்தது போல, அதைப் பின்பற்றி வருவார்கள். அது எப்பொழுதுமே அவ்விதமாகத்தான் இருக்கும்”, என்றேன். லூத்தர், கொஞ்ச நாட்களுக்கு முன் நான் லூத்தரின் வரலாற்றைப் பற்றி போதித்துக் கொண்டிருந்தேன், அதில் இப்படியாகக் கூறப்பட்டது, மார்டின் லூத்தரின் மாபெரிய காரியம் என்பது ஏதோ கத்தோலிக்க சபையை எதிர்த்து, அதைவிட்டு வெளிவருவதல்ல; ஆனால் அவருடைய எழுப்புதலைப் பின்பற்றி வந்த எல்லா மதவெறித்தனத்துக்கு மேலாகவும் தன்னுடைய தலையைத் தூக்கி நிமிர்ந்து நிற்பதுதான். எனவே அதுதான் சரியானது. 19எனவே நான், “அதே விதமாகத்தான் இங்கேயும் அது பின்தொடரும்” என்றேன். ஆகவே நான், நீங்கள் ஊழியத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். டாமி, “அது உங்களுக்குத் தெரியும்”, என்றேன். அவர், “ஆம், எனக்குத் தெரியும்”, என்றார். அவர் தேவனுக்காக சாதிக்கக்கூடிய ஒரு வாலிப மனிதனாகக் காணப்பட்டார். எனவே நான், சரி, நான் உங்களுடைய இடத்தில் இருந்திருந்தால்... நீங்கள் ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்டிருப்பீர்களானால், “நீங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்கும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்! எனவே தெய்வீக சுகமளித்தல் வரங்கள் இன்னும் மற்ற காரியங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். வெறுமனே வியாதியஸ்தர்களுக்காக ஜெபியுங்கள்”, என்றேன். நான் அங்கிருக்கும் அந்த வயதான கர்வாலி மரத்தின் (oak tree) கீழ் சென்று, தெய்வீக சுகமளித்தல் என்கிற வார்த்தையைப் பற்றி கற்றுக் கொள்ளப்போகிறேன்“, என்றேன். அவர், என்ன வயதான கர்வாலி மரமா?“ என்றார். நான், “அங்கே முன் முற்றத்தில் உட்கார்ந்திருக்கும் வழுக்கை தலையரான டாக்டர் எப்.எப் பாஸ்வர்த்தான்”, என்றேன். நான், “இந்த தேசத்தில் தெய்வீக சுகமளித்தல் குறித்ததான தேவனுடைய வார்த்தையை அவர் அறிந்திருந்ததைப் போன்று வேறு யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்”, என்றேன். 20நான் ஆப்பிரிக்காவுக்கு போய்க் கொண்டிருந்தேன். இங்கே சில... இங்கே ஒரு சில வருடங்களுக்கு முன், நான் மடிசன் சதுக்கத்தில் இருந்தேன்... இல்லை நீங்கள் நியூயார்க் சென்றிருந்தபோது அங்கே நீங்கள் காணச் சென்ற அந்த இடத்தின் பெயர் என்ன?செயின்ட் நிக்கோலஸ் அரங்கம். எனவே இங்கே வருவதற்கு அவ்வளவு தூரம் அவர் விமானத்தில் பயணப்பட்டு வந்தார், அங்கேயிருந்து அவ்வளவு தூரம் அவர் விமானத்தில் பயணப்பட வேண்டியதாய் இருந்தது. ஒரு இரவு நான் மேடையைவிட்டு நடந்து சென்றேன், அப்பொழுது அவர் என்னைப் பார்த்துவிட்டார். அவர், அந்த விதமாக, அழத் துவங்கினார், எனவே நான் திரையின் பின்னாக ஓடிச் சென்று, அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். நான், “டாமி, நீங்கள் தீவுகளிலிருந்து சற்று முன்னர் தான் வந்திருக்கிறீர்கள்”, என்றேன். அவர், “ஆம், சகோதரன் பிரான்ஹாம்”, என்றார். நான், “தேனே, நீங்கள் மிகவும் களைப்பாய் இருக்கிறீர்கள். ஏன் நீங்கள் அவ்வளவு தூரம் பயணப்பட்டு இங்கே வந்தீர்கள்'', என்றேன். அவர், “நான் கொஞ்சம் கூட களைப்படையவில்லை. நான் தேன்நிலவு பயணத்தில் இருக்கிறேன்”, என்றார். நான், “தேன் நிலவா?”, என்றேன். அவர், “ஆம், நானும் என் மனைவியும். எங்களுக்கு மிகவும் சந்தோஷமான நேரம் உண்டாயிருந்தது. கவனியுங்கள் சகோதரன் பிரான்ஹாம். கர்த்தர் எனக்கு எந்த ஒரு இருதய வகையறுத்தலையும் மற்றும் வேறெதையும் கொடுக்காததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்”, என்றார். மேலும் அவர், “நீங்கள் என்னை அந்த வயதான கர்வாலி மரத்தின் கீழ் உட்காரச் சொன்னது உங்களுக்குத் தெரியுமா? என்றார். நான், “ஆம்” என்றேன். “அந்த வழுக்கை தலை நபர்தானே?” நான், “ஆம், ஐயா” என்றேன். அவர், “அங்கே நான் ஒரு காரியத்தைக் கற்றுக் கொண்டேன்”, “அதைக் கொண்டு நான் தொடர்ந்து சென்று, வார்த்தையை எடுத்து கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்குப் பேசி, சாத்தானால் விடுபடமுடியாத அளவுக்கு அவனை முடிச்சு போட்டு கட்டிப் போட்டேன். அதன்பிறகு ஜெபத்தை ஏறெடுத்து, சுகத்தைப் பெற்றுக் கொண்ட யாவரும் மேலே மேடைக்கு வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்தேன்”, என்றார். தொடர்ந்து முதலாவது வருபவர் எழுந்து வந்து மற்றவருக்கு தைரியத்தைக் கொடுங்கள், எனவே இன்னொருவர்... நானும் என் மனைவியும் வெறுமனே அங்கே பின்னால் உட்கார்ந்து, கரங்களைத் தட்டிக்கொண்டு, அருமையான நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட பதினொரு மணி வரைக்கும் கூச்சலிட்டு, பின்னர் மீதமிருந்த அவர்களையும் மேடைக்கு வரும்படி செய்து, பிறகு நாங்கள் வீடு திரும்பினோம். நாங்கள் அந்த நிலவு வெளிச்சத்தில் நடந்தபடி, அருமையான நேரத்தை அனுபவித்தோம்“, என்றார். நான், “ஆம், அதே கர்வாலி மரம்தான் இங்கே இந்த இரவில் உட்கார்ந்து கொண்டு, என்னுடன் ஆப்பிரிக்காவுக்கு வரும்படிக்கு காத்துக் கொண்டிருக்கிறது”, என்றேன். தேவன் அவருடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. அவர் இன்றிரவு அக்கரையில் நித்திய ஜீவனின் சந்தோஷத்தை அனுபவித்தவராய் மகிமையில் இருக்கிறார். ஓ, தேவனே, நாங்களெல்லாரும் அங்கே அக்கரையில் வந்தடையும்போது, நான் மிகவும் சந்தோஷப்படுவேன், நீங்கள் சந்தோஷப்படமாட்டீர்களா? அங்கே எல்லாமே (தொல்லைகள்) முடிவு பெற்றதாய் இருக்கும். எனவே இன்றிரவில், நீங்கள் ஆபிரகாமுடைய வித்தாய் இல்லாத பட்சத்தில், நீங்கள் வந்து இயேசு கிறிஸ்து மூலமாய் ஆபிரகாமுடைய வித்தாக ஆகிவிடுங்கள். 21இப்பொழுது வேத வசனத்திலிருந்து ஒரு வசனத்தைப் படிக்க விரும்புகிறேன். இன்றிரவு இந்த வேத வசனத்தை எனக்குப் படிக்கும்படிக்கு ஒருவர் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகோதரன் ராய், சில... படிக்கும் படிக்கு நான் விரும்புகிறேன். இன்னும் ஒன்றை, ஏனெனில் என்னுடைய வார்த்தைகள் ஒழிந்து போனாலும் அவருடையது ஒழிந்துபோகாது. எனவே நான் பரிசுத்த... யோவான் முதலாம் அதிகாரம் ஏழாம் வசனத்தைப் படிக்க விரும்புகிறேன். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். இப்பொழுது, “ஐக்கியத்தின் அடிப்படை” (The basis of Fellowship) என்கின்ற தலைப்பிலிருந்து மற்றும் இதுதாமே பேசுவதற்கான ஏற்ற பகுதியாய் இருக்கும் என்றால் இதிலிருந்து சிறிது நேரத்திற்கு பேசுவதற்கான ஒரு பகுதியை எடுக்கலாம் என்று நான் விரும்புகிறேன். “அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்”, இப்பொழுது நான் ஐக்கியத்தைக் குறித்ததான காரியத்தைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இப்பொழுது, நாம் இங்கே ஏன் கூடி வந்திருக்கிறோம்? ஒருவேளை நாம் இங்கே வெவ்வேறு அமைப்பிலிருந்து வந்திருக்கலாம். வெவ்வேறு ஸ்தாபனங்கள் இங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஒருவேளை மெதொடிஸ்ட், பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தே, ஒருத்துவம், இருத்துவம், மூன்றுத்துவம், நான்குத்துவம் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ, அப்படிப்பட்ட யாவரும் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் என்றாவது ஒருநாள் தேவன் நம்மெல்லாரையும் ஒன்றாக வரும்படிச் செய்வார். அவர் செய்வார், பாருங்கள்... செய்யும்படிக்கு. 22கொஞ்ச நாட்களுக்கு முன், சரியாக இங்கே டெக்ஸாஸிலிருக்கும் ஹூஸ்டனில், பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்த டாக்டர் பெஸ்ட் ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன்னுடைய புகைப்படத்தை எடுக்கும்படிக்கு அனுமதித்தார். சகோதரன் பாஸ்வர்த் மற்றும் அவருக்கு இடையே நடக்கப் போகிற விவாதத்தை, அங்கே என்னுடைய கூட்டத்தில், அவர்கள் அறிவிப்பு பேப்பரில் வைத்திருந்தார்கள். தேவன் அங்கே போகும்படிக்கு என்னை அனுப்பினார், ஏனெனில், அங்கே... பங்கு கொண்டவர்கள்... அவர்கள் எதற்கும் கவனம் செலுத்தவில்லை. ஒரு காரியம் பொதுவில் இருந்தது. தெய்வீக சுகமளித்தல் என்னும் காரியம் ஆபத்தான நிலையில் இருந்தது, எனவே ஒவ்வொருவரும் அங்கு வந்து அதற்காக ஐக்கியப்பட்டிருந்தார்கள். எனவே சில சமயங்களில் காரியம் அவ்விதமாய் இருக்கும். கடைசியாக கம்யூனிசம் இங்கிருந்து அடியோடு தானே அழிந்து போகும், அப்பொழுது ஒருமித்த விலையேறப்பெற்ற விசுவாசத்தைக் கொண்ட சகோதரர்களை நாம் காணும் போது, ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்வதில் நாம் சந்தோஷமடைவோம். மேலும் அவர்கள் ஒரு திமில் கொண்ட ஒட்டகத்தின் மீதோ அல்லது இரண்டு திமில் கொண்ட ஒட்டகத்தின் மீதோ அல்லது வேறெதின் மீதோ சவாரி செய்தாலும், எவ்விதத்தினாலாவது அவர்களோடு கூட சவாரி செய்வதில் நாம் சந்தோஷப்பட்டு, அவர்களுடைய ஐக்கியத்தில் பங்கு கொள்வோம். அதைக் காணுமட்டும் நான் ஜீவிப்பேன் என்று நான் நம்புகிறேன். 23எனவே, நாம் ஒன்று கூடி வருவோமானால் அதுவே ஐக்கியமாகும். ஆனால் நீங்கள் செய்ய முடியாது... காகங்கள் மற்றும் புறாக்கள் போன்றவை, அவைகளால் ஒன்றுக்கொன்று ஐக்கியம் கொள்ளமுடியாது. அவைகளின் உணவு வேறு, பழக்கவழக்கங்கள் வேறு. நீங்கள் ஒருவருக்கொருவர் இசைவில் (உடன்பாட்டில்) இருக்கும் போது மட்டுமே ஐக்கியத்தில் இருக்கமுடியும். இப்பொழுது எது மனுஷர்களை ஐக்கியம் கொள்ளும்படி விரும்பச் செய்கிறது. எது நம்மை ஒன்று கூடிவரும்படி செய்து, ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளச் செய்கிறது? அதற்கு காரணம் அதிலிருந்து வருகிற ஒரே விதமான பாரம்பரிய குணமாகும். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு புகழ் மிக்க கிரேக்க ஓவியன் வரைந்த ஆதாம் ஏவாள் படத்தைக் கொண்டிருந்த ஒரு பெரிய அருங்காட்சியகத்தில் இருந்தேன். என் வாழ்நாளில் அவ்வளவு அசிங்கமாக வரையப்பட்ட ஏவாள் மற்றும் ஆதாமின் படத்தை நான் பார்த்ததேயில்லை. எனவே அதில், ஏவாள் அவ்விதமாக அவளுடைய தலைமுடி இப்படியாக நீட்டிக் கொண்டும், தாடை பக்கவாட்டில் கோணலாகவும், ஒருகை இப்படியாகவும் இன்னொரு கை அப்படியாகவும், மற்றும் ஒரு கால் அவ்வளவாக தடிமனாகவும் இன்னொன்று வேறுவிதமாக இருக்கும்போது, ஓ, அது பார்ப்பதற்குப் பயங்கரமாகவும், கோரமாகவும் காணப்படுகிற காரியமாய் இருக்கும். எனவே, ஆதாம் விழித்து எழுந்தபோது, ஏவாள் அவ்விதமாய் இருப்பதை அவன் பார்த்திருப்பானானால்; இன்றைக்கும் மனுஷனுடைய வாஞ்சை அவனுடைய மனைவி அவ்விதமாய் காணப்பட வேண்டும் என்றுதான் இருக்கும். ஏனெனில் அது ஒரு பாரம்பரிய குணம் ஆகும். அது சரிதான். இப்பொழுது நாம் அதைக் காட்டிலும் நன்றாய் அறிந்திருக்கிறோம். எனவே, ஒரு காரியம் பரிபூரணமாய் இல்லாத பட்சத்தில் தேவன் அதைச் செய்யமாட்டார். அது சரியானதாகவும், நல்லதாகவும், விலையேறப்பெற்றதாகவும் மற்றும் பரிபூரணமானதாகவும் இருக்கும். 24எனவே நான் விசுவாசிக்கிறேன், இன்றைக்கு இருக்கிற மனுஷர்களைப் போல்... ஏன் மனுஷனால் முடியவில்லை... அவன், தான் ஒரு பாவி என்று கண்டு கொண்டபோது, ஏன் அவன் அவரிடத்தில் வந்து, “பிதாவே, நான் ஒரு பாவி. நீர் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”, என்று அவன் கூறக் கூடாது? இல்லை, இல்லை. அவன் அதைச் செய்யமாட்டான். நீங்கள் பார்ப்பீர்களானால் ஆதாம் புதரில் எங்கோ ஒளிந்து கொண்டதுபோல, தன்னை ஒளித்துக் கொள்ளுகிறான், பாருங்கள். அவன் அதினோடு... இருக்க விரும்புகிறான், ஏன்? ஏனெனில் அதைத்தான் அவன் ஆரம்பத்தில் செய்தான். எனவே பூமியில் இருந்த பெண்களிலேயே ஏவாள் மிகவும் அழகான பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என்று அவ்விதமாய் நான் நினைக்கிறேன். எனவே தேவனுடைய பரதீசுகளில் ஆதாமும், அவளும் (ஏவாள்) ஒன்றாக நடந்து வருவதை நான் பார்க்க ஏங்குகிறேன். ஏனெனில் நம்முடைய பூமிக்குரிய தாய் பார்ப்பதற்கு எவ்விதமாய் இருக்கிறாள் என்று நான் பார்க்க விரும்புகிறேன். அவள் அழகான நபர் என்பதில் சந்தேகமேயில்லை. எனவே ஆதாம் அவனுடைய ஒவ்வொரு பண்பும் ஆணுக்குரியதாயும், மற்றும் எல்லா வகையிலும் அவன் ஆண்மைக்குரியவனாக இருந்தான்; அவ்விதமே ஏவாளும் ஒவ்வொரு வழியிலும் பெண்மைக்குரியவளாக இருந்தாள். 25எனவே இப்பொழுது, மனிதன் ஏன் ஐக்கியம் கொள்ள ஏங்குகிறான் என்று நாம் அறிந்து கொண்டோம், காரணம் ஒரு விசை அவன் ஐக்கியத்தை உடையவனாய் இருந்தான், அதுவும் அவனுடைய ஐக்கியம் தேவனுடன் இருந்தது. எனவே அவன் என்ன நிலையில் இருந்தாலும், இன்றைக்கு அவன் எந்த நிலையில் இருந்தாலும்; தன்னால் முடிந்த சிறப்பானதற்கு முயன்று கொண்டிருக்கிறான். அவன் இந்தியனாய் (செவ்விந்தியர்கள்) இருக்கும் பட்சத்தில்... எனவே நாங்கள் இங்கே வந்தபோது, ஒரு இந்தியன் சூரியனை ஆராதிப்பதையும்; மற்றும் விலங்குகள், இயற்கைப் பொருட்களின் உருவச் சிலை கொண்ட ஒரு கம்பத்தை ஆராதிப்பதையும் கண்டோம். நாங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, அவர்கள் தங்களுடன் சிறிய விக்கிரகங்களையும் இன்னும் மற்ற காரியங்களையும் வைத்திருப்பதைக் கண்டோம். எனவே அவன் எவ்விதத்தினாலாவது தன்னுடைய வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று முயற்சித்துக் கொண்டிருந்தான். காரணம் அவனுடைய துவக்கமே தேவனுடன் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும் என்பதாய் இருந்தது. எனவே அங்கிருந்துதான் அது வந்ததாயிருக்கிறது. அவனுக்குத் தெரியும் அவன் அந்த திரைக்கு அப்பால் எங்கிருந்தோ வந்திருக்கிறான் என்று. எனவே, தான் எங்கிருந்து வந்தோம் என்று பார்க்கும்படிக்கு அதைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். மற்றும் அந்த வழியில் தான் அவன் திரும்பிச் செல்கிறான். எனவே மனிதர்கள் தாங்கள் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்றும் மற்றும் எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் கவனித்துக் கொண்டிருக்கிற அந்த காரணத்தில்தான் இயற்கைக்கு மேம்பட்ட காரியம் அவனை அதிகமாகக் கவருகிறது. உலகில் அதைக் கூறக் கூடிய புத்தகம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது வேதாகமமே (Bible). நீங்கள் யார் என்றும், நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், மற்றும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றும் கூறக் கூடியது அதுவே. அது உண்மை. நீ போய்ச் சேரும் இடம் (destination) எதுவென்றும், நீ எங்கிருந்து வந்தாயென்றும், நீ யார் என்றும் சரியாக இங்கே வேதாகமத்தில் கண்டுபிடிக்க முடியும். 26எனவே, மனிதன் தான் பாவி என்று கண்டுகொண்ட உடனே, அவன் திரும்பி வருவதற்கு தன் சொந்த வழியிலேயே எப்பொழுதும் முயல்கிறான். அவன் தன் சொந்த வழியிலேயே திரும்பி வருவதற்கு முயன்றதால், அவன் முற்றிலும் இழக்கப்பட்டுப் போனான். எனவே அந்த காரணத்தினால் தான் கிறிஸ்து நம்மை ஆடுகளுக்கு, அவருடைய மேய்ச்சலின் ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார். எவராவது எப்பொழுதாவது ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றிருப்பீர்களானால், ஒரு ஆடு தொலைந்து போனால், அது முற்றிலும் தொலைந்து போனதுதான். அவைகளை நான் அநேகமுறை மேய்த்திருக்கிறேன். அப்படி தொலைந்துபோன ஆடுகள் அங்கே வெளியில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே மற்ற ஆடுகளிலிருந்து அவை தொலைந்து போகுமானால், அது அங்கேயே நின்று கொண்டு ஒரு ஓநாய் வந்து அதை பிடித்துக் கொள்ளும் வரைக்கும் அல்லது வேறெதாவது சம்பவிக்கும் வரைக்கும் கத்திக் கொண்டிருக்கும். அதினால் திரும்பிப் போகிற வழியைக் கண்டுபிடிக்க முடியாது. அது முற்றிலும் தொலைந்து போய்விட்டது. அதற்கு ஒரு மேய்ப்பன் தேவையாயிருக்கிறது. எனவே அவ்விதமாகத்தான் மனித வர்க்கமும் இருக்கிறது. ஒரு சிறுத்தை எப்படி தன்மேல் இருக்கும் புள்ளிகளை நக்கி போக்கிக் கொள்ள முடியாதோ, அவ்விதமே நாமும் நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாது. அது தொடர்ந்து தன் நாவினால் நக்கும் போது, அது அதை (புள்ளிகளை) இன்னும் தெளிவாக்கும். எனவே... ஆனால் அது தன்னுடைய பாரம்பரிய குணத்தைத்தான் காண்பிக்கிறது. அது தன்னுடைய வழியை கண்டுபிடிக்கும்படிக்கு முயல்கிறது. தன்னுடைய வழியை கண்டுபிடிக்கும்படிக்கு அது இன்னும் அதே மனப்பான்மையைத்தான் கொண்டிருக்கிறது. 27பின்னர், அவன் தன்னைதானே அத்தி இலைகளைக் கொண்டு மூடிக் கொள்ள முயற்ச்சித்தான் என்பதை நாம் காண்கிறோம், தன்னை அவன்... எனவே, மதம் (religion) என்பது ஒரு மூடிக் கொள்ளுதலாயிருக்கிறது. எனவே அது ஒரு மூடிக் கொள்ளுதல் (covering) என்பதை நாம் அறிந்து கொள்ளுகிறோம். முதலாவது அவன் தன்னை மூடிக் கொள்ளும்படிக்கு முயற்ச்சித்தான், அத்தி இலைகளைக் கொண்டு சில மேலாடைகளை தனக்குச் செய்து கொண்டான். ஆனால் அது தேவனுடைய சமூகத்தில் வேலை செய்யாது என்று அறிந்து கொண்டான். தேவன் அவனுடைய கரத்தின் கிரியைகளைக் கண்டனம் பண்ணினார் (condemned). அவனால் அதைச் சரிசெய்ய முடியாமல் போனது. மேலும் அவன் எல்லா வெள்ளங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும்படிக்கு ஒரு கோபுரத்தை கட்ட முயற்சித்தான், அதினிமித்தம் பாபேலிருக்கும் கோபுரத்தின் மூலம் திரும்பிப் போகும் வழியை, அதாவது தேவனிடத்தில் திரும்பிப் போகும் வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்தான். தேவனோ அதை கண்டனம் பண்ணி, அவர்களுடைய மொழியை குழப்பிப்போட்டார். அந்த கோபுரம் கட்டும் வேலையும் கைவிடப்பட்டது. எனவே ஒவ்வொரு முறையும் மனிதன் தன்னுடைய சொந்த வழியில் செய்ய முயற்சிக்கும் போது, அவன் தோல்வியடைகிறான். 28எனவே அவன் (மனிதன்) தேவனோடு இருந்த ஐக்கியத்தை இழந்த பிறகு அவன் அலைந்து திரிகிறவனாகி, தன்னுடைய பிழைப்புக்காக வெவ்வேறு இடமாக மாறிச் சென்றான், ஆனால் அதற்கு முன்னரோ தேவன் அவனைப் பாதுகாத்து வந்தார். ஆனால் இப்பொழுதோ அவன் பிழைப்புக்காக வெவ்வேறு இடமாக மாறிச் செல்ல வேண்டியதாய் இருந்தது. உண்மையிலேயே அது ஒரு கடினமான காரியமாக இருந்தது. எனவே அவனுக்கு ஏற்கனவே அவர் செய்தது போல இப்பொழுது அவனைக் கண்கானிக்கக் கூடிய, பாதுகாக்கக் கூடிய, வழிநடத்தக் கூடிய, வழிகாட்டக் கூடிய,போஷிக்கக் கூடிய, உடுத்தக் கூடிய ஒரு அன்பான பிதா இல்லாமலிருந்தது. எனவே அவன் அவரிடத்தில் திரும்பி வருவதற்குப் பதிலாக, அவன் தன்னுடைய சொந்த வழியில் போகும்படி முயற்சித்தான். அவன் திரும்பி வரும்படி தன்னுடைய வழியில் முயற்சித்தான். மனிதன் தன்னுடைய சொந்த வழியில் போகவே விரும்புகிறான். அவன் எப்பொழுதும் அவ்விதமே போக விரும்புகிறான். அவன் எப்பொழுதும் தன் சொந்த வழியில் போனான், எப்பொழுதுமே சொந்த வழியில் போவான் என்று நான் நினைக்கிறேன். எனவே ஒவ்வொரு முறையும் அவன் தன் சொந்த வழியில் போக முயலும் போது, அவன் எப்பொழுதும் தவறான வழியில் போகிறான். 29இப்பொழுது, நாம் இந்தக் காலத்தில்... பார்க்கிறோம். எனவே அவன் திரும்பிப் போகும்படிக்கு முயன்ற சில வழிகளை நாம் பார்ப்போம். இக்காலத்தில் தனக்குத்தானே தன்னுடைய அறிவுத்திறன்கள் மூலமாக அவன் திரும்பி வரும்படி முயற்சித்தான். அவன் திரும்பவும் தனக்குத்தானே கல்வியறிவை வளர்த்துக் கொள்ள முயற்சித்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் நமக்கு, “நாம் மட்டும் உலகத்துக்கு கல்வியறிவை போதிப்போமானால்” என்ற திட்டத்தை கொண்டிருந்தோம். இங்கே கிட்டத்தட்ட எழுபத்தைந்து வருடங்களுக்கு முன் உலகமானது திரும்பவும் ஐக்கியத்துக்குள் வரும்படிக்கு, எல்லா தேசங்களையும்... தனக்கு கல்வியறிவை போதித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தது. நாம் உலகத்தை நாகரிகமானதாக மாற்றி, சுதந்திர இராஜ்ஜியங்களைக் கொண்டு வந்து, இன்னும் அஞ்ஞானிகளையும் மற்றவைகளையும் கொண்டுவந்து, மற்றும் சபைகளில் படிப்பறிவையும், எழுத்தறிவையும், கணிதத்தையும் போதிக்கக் கூடிய திட்டங்களை நாம் துவங்கினபோது, நாம் என்ன செய்தோம்? அது (உலகம்) துவங்கினபோது இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது இரண்டு மடங்கு நரகத்தின் பிள்ளைகளைக் கொண்டதாக அதை மாற்றிவிட்டோம். சமீபத்தில் தான் நான் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தேன், அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் செய்ததிலேயே மோசமான காரியம் என்னவெனில் தேவனை விசுவாசிக்காதவர்களுக்கு கல்வியைப் போதித்ததுதான். அங்கே இருப்பதிலேயே போதிப்பதற்கு மிகவும் கடினமான அஞ்ஞானியாரென்றால் அது கல்வியறிவை பெற்றுக் கொண்ட அஞ்ஞானிதான். இப்பொழுது அஞ்ஞானி என்பவன் ஒரு அவிசுவாசியாவான். எனவே நீங்கள் கல்வியறிவில்லாத ஒரு அஞ்ஞானியைக் கொண்டு வருவீர்களானால், சில சமயங்களில் அவனிடத்தில் கூட பேசிவிடலாம். ஆனால் நீங்கள் அவனுக்கு கல்வியறிவைப் போதிப்பீர்களானால், நீங்கள் அறிந்ததைக் காட்டிலும், அல்லது தேவன் அறிந்ததைக் காட்டிலும், அல்லது வேறு யார் அறிந்ததைக் காட்டிலும் அவன் அதிகமாக அறிந்திருப்பான். எனவே, நாம் என்ன செய்ய முடியும்? இப்பொழுது, எனவே இங்கிருக்கிற என்னுடைய வெள்ளையர் அல்லாத (Colored) நண்பர்கள் புரிந்து கொள்வார்கள், நீங்கள் ஆப்பிரிக்க நீக்ரோவை எடுத்துக் கொள்வீர்களானால்... அவன் அங்கே வெளியே தன்னுடைய சிறிய குடிசையில் இருக்கும் போது, அவன் சரியாய் இருக்கிறான். அவனுக்கு தேவையான ஒரே ஒரு காரியம் கிறிஸ்துதான். ஆனால் அவனை நீங்கள் பட்டணத்துக்குள் கொண்டு வருவீர்களானால்... 30நான் உங்களுக்குக் கூறட்டும், அங்கே அவர்கள் ஜீவிக்கிற தங்கள் சொந்த ஜீவியத்தின் மூலம், இங்கே இருக்கிற இந்த கிறிஸ்தவ உலகத்துக்கு, அவர்கள் அறிந்திராத ஒழுக்கங்களை இவர்களால் போதிக்க முடியும். ஏனென்றால், அங்கே ஒரு பழங்குடி இனம் இருக்கிறது, ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகும் இன்னமும் திருமணம் செய்யப்படும்படிக்கு காத்துக் கொண்டு... எனவே அந்த சமயத்துக்குள் அவளுக்கென்று வேறு யாரும் இல்லாத போது அல்லது எவரையாவது அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பாளென்றால், பின்னர் அவள்தாமே அந்த பழங்குடி வர்ணத்தை நீக்கிவிட்டு, பட்டணத்துக்குச் சென்று, பட்டணத்திலிருக்கிறவர்கள் போல ஒரு தினக்கூலியாக இருக்க வேண்டியதுதான். அவள் இருக்கும் அந்த கூட்டத்துக்குச் செல்லுங்கள், அப்பொழுது அவள் தன்னுடைய பழங்குடியினர்க்கு மத்தியில் திரும்பவும் இருப்பதற்கு ஒருபோதும் தகுதியில்லாத நிலைமையில் இருப்பாள். இப்பொழுது, அவளுக்கு திருமணம் செய்யப்பட வேண்டும், மற்றும் அவள் திருமணம் செய்வதற்கு முன் அவளுடைய கன்னித் தன்மையானது (Virgincy) நிரூபிக்கப்பட வேண்டும். அப்பொழுது அவள் குற்றவாளியாக கண்டுபிடிக்கப்படுவாளானால், அதைச் செய்த மனிதன் யார் என்றும் அவள் கூற வேண்டும், பின்னர் இருவரும் ஒன்றாகக் கொல்லப்படுவார்கள். அதையே இன்றிரவு ஹாலிவுட்டிலோ அல்லது லாஸ் ஏஞ்சலிஸிலோ அல்லது ஐக்கிய அமெரிக்கா முழுவதும் செய்வார்களானால்? அநேகர் கொல்லப்பட வேண்டியதாயிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட இரவு ஜீவியம் ஆப்பிரிக்காவில் இருக்காது. இல்லை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் ஜீவிப்பதைக் காட்டிலும்; அவர்கள் மேலான சுத்தமான ஜீவியத்தை ஜீவிக்கிறார்கள். ஆம், ஐயா. அந்த பெண் குற்றவாளியாகக் கண்டுபிடிக்கப்படுவாளானால்... அங்கே ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிப்போய் அல்லது தன்னுடைய புருஷனுக்கு அவள் உண்மையாய் இல்லாதது கண்டுபிடிக்கப்படுமானால், அங்கேயே அப்பொழுதே அவளுடன் இருக்கிற அந்த மனிதனோடு சேர்த்து அவளும் கொல்லப்படுவாள். ஆம் ஐயா, அவர்களுக்கு மத்தியில் அப்படிப்பட்ட ஒழுங்கீனமான காரியங்கள் இருக்காது. நான் இருதயத்தை வகையறுத்த காரியங்களில் எல்லாம் அவர்களில் ஒருவர் கூட பால்வினை நோய் பாதிக்கப்பட்டதாக நான் கண்டுபிடிக்கவில்லை. அது சரிதான். அவர்களில் ஒருவர் கூட இல்லை. அவர்களில் காசநோய், மற்ற நோய்களையும், தொழுநோயைக் கூட கண்டு பிடித்திருக்கிறேன், ஆனால் ஒரு ஒழுங்கீனமானதையும், எந்த பால்வினை நோயையும் நான் கண்டுபிடிக்கவில்லை. 31இப்பொழுது, கவனியுங்கள், அங்கே அவர்கள் நாடோடிகளாய் இருந்தார்கள். ஆனால் நம்முடைய கல்வியைக் கொண்டு நாம் அவர்களுக்கு என்ன செய்தோம்? பலதரப்பட்ட மக்கள் கூடுகிற கூடுகையில் தான் அவர்களைக் கொண்டு வந்தோம். தங்களுடைய பழங்குடி அடையாளமான வர்ணத்தை நீக்க முயன்று கொண்டிருக்கும் அவ்விடத்தில் வந்து, ஒரு சிறிய தகர பீர் டப்பாவை எட்டி உதைத்து... அங்கிருக்கிற வெள்ளாடுகளும், பன்றிகளும், மற்றும் அங்கிருக்கிற ஒவ்வொன்றும் இன்னும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளும், நான்கு அல்லது ஐந்து ஆண்களும், நான்கு அல்லது ஐந்து பெண்களும் அங்கிருந்து ஓடுவதை நீங்கள் பார்க்கலாம். அதைத்தான் நாகரீகமானது அவர்களுக்கு செய்ததாயிருக்கிறது. இங்கிருக்கிற இந்த தேசம் ஒரு சமயம் அருமையான தேசமாயிருந்தது. இங்கே செவ்விந்தியர்கள் மட்டுமே ஜீவித்து வந்தனர். அவனிடத்தில் பாவம் கொஞ்சமே இருந்தது, பழங்குடியின யுத்தமும் அவர்களுக்குள் கொஞ்சம்தான் இருந்தது. ஆனால் வெள்ளை மனிதன் வந்தவுடன், அவன் என்ன கொண்டு வந்தான்? பெண்களையும், விஸ்கிகளையும் (ஒரு வகை சாராயம்), கொல்லுதலையும், கொலைகளையும் கொண்டு வந்தான். இப்பொழுது அது எங்கிருக்கிறது என்று பாருங்கள். எப்பொழுதும் நாகரீகம் பாவத்தைதான் கொண்டுவரும். மனிதன் பூமியின் மீது பெருகத் துவங்கினபோது, கொடுமையும் ஆரம்பமானது, அதினிமித்தம் தேவன் உலகத்தை அழித்துப் போட்டார். 32பாவம் நாகரீகத்தினால் வந்தது. எனவே உங்கள் புத்திசாலித்தனம் மறுபடியும் உங்களை தேவனுடைய ஐக்கியத்துக்குள் கொண்டு செல்லாது. இது கடினமான கூற்றுதான், இருப்பினும் எல்லா சகிப்புத் தன்மையோடும் மற்றும் நான் அறியாமையை ஆதரிக்க முயற்சிக்காமல் இதை நான் கூறட்டும். கல்விதான் இருப்பதிலேயே இயேசுவுக்கு மோசமான எதிரி என்று நான் நினைக்கிறேன். உலகத்துக்கு கல்வியறிவை கொடுக்கும் போது, நீங்கள் ஒரு கூட்ட படித்த அஞ்ஞானிகளைத்தான் பெற்றுக் கொள்வீர்கள், மற்றும் நீங்கள் அவர்களுடன் எதையும் செய்ய முடியாது. கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய கூட்டத்தில் ஒரு FBIயை (அமெரிக்க புலனாய்வுத்துறை) சேர்ந்த ஒரு மனிதன் மனம் மாற்றம் அடைந்தார், அவர் என்னை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று, குற்றமானது எங்கிருந்து எப்படியாக துவங்குகிறது என்று காண்பித்தார் மற்றும்... அவ்விதமான கூற்றை நான் ஒரு சமயம் என்னுடைய கூட்டத்தில் எடுத்துக் கூறினேன். எப்படியாக நீங்கள் ஒரு சிறு காரியத்தை எடுத்து, பூலோக வரைபடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட இடங்களைக் குறிப்பிட்டுக் காண்பிப்பது போல, அவரும் கூட ஒரு பூலோக வரைபடத்திலிருந்து எனக்குக் காண்பித்தார். அது எதை காண்பித்ததென்றால் எங்கே அதிக படித்த மக்கள் இருந்தார்களோ, அங்கே தான் அதிகப்படியான குற்றங்கள் இருப்பதையும் அது காண்பித்தது. அதுசரி. சட்டத்தையும் மற்றும் அப்படிப்பட்ட காரியங்களையும் காட்டிலும் அவர்கள் அறிவில் விஞ்சியிருக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனிதனுடைய ஆத்தும இரட்சிப்பிற்கு கல்வியானது ஒரு தடையாகவே இருந்து வருகிறது. எனவே, அது எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அது வரைக்கும் அது இருக்கும்போது கல்வி அருமையானதாய் இருக்கிறது. ஆனால் இரட்சிப்பின் இடத்தை அதினால் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே கிறிஸ்துவண்டை திரும்பி வரும்படிக்கு மனிதன் தன்னைத்தானே படிப்பித்துக் கொள்வது அது காற்றில் சண்டையிடுவதற்குச் சமமாய் இருக்கிறது. அதை அவனால் ஒருபோதும் செய்யமுடியாது. அதை அவனால் செய்யவே முடியாது. 33எனவே, அது தோல்வியடைந்த போது... இப்பொழுது அவர்கள் மக்களை ஒன்று கூட்டி ஐக்கியத்துக்குள்ளாக கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதன் பிறகு உலகத்தை ஸ்தாபனமாக்கிவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். மெதொடிஸ்டு தங்களை ஸ்தாபனமாக்கி கொண்டிருக்கலாம், பாப்டிஸ்டும் தங்களுடையதை பெற்றிருக்கலாம், கத்தோலிக்கர்களும் தங்களுடையதை பெற்றிருக்கலாம் மற்றும் பெந்தெகொஸ்தேக்களும் தங்களுடையதைப் பெற்றிருக்கலாம், ஆனால் அது இன்னொரு மரணத்தை விளைவிக்கக் கூடிய பிழையாயிருக்கிறது. உங்களால் அதைச் செய்ய முடியாது. உங்களால் அதை ஒரு போதும் செய்ய முடியாது. அவர்கள் கல்வி திட்டத்தைக் கொண்டு, காற்றில் சண்டையிட்டது போல நீங்களும் அவ்வளவாக காற்றில் சண்டையிடுகிறவர்களாய் இருக்கிறீர்கள். அதை உங்களால் ஒருபோதும் செய்ய முடியாது. அது துவக்கத்தில் அவ்விதமாக தேவனுடைய திட்டத்தில் இல்லை. நீங்கள், “சரி, எங்களுக்கு ஒரு பெரிய திட்டம் இருக்கிறது” என்று கூறலாம். எங்களுக்கு... அது அவ்விதமாய் இருக்கலாம், ஆனால் அதினிமித்தம் சபை மரணத்துக் கேதுவான திட்டத்தைக் கொண்டதாய் இருக்கிறது. அதுசரி. நமக்கு திட்டங்கள் அவசியமில்லை; நமக்கு ஜெப கூட்டங்களே அவசியமாயிருக்கிறது. அது சரிதான். நமக்கு கல்வி அவசியமில்லை; நமக்கு... இரட்சிப்பே நமக்கு அவசியமாயிருக்கிறது. இரட்சிப்பு கல்வியில் இல்லை. இரட்சிப்பு ஸ்தாபனத்தில் இல்லை. கல்வி அதினுடைய பங்கைச் செய்கிறது. ஸ்தாபனம் அதினுடைய பங்கை செய்கிறது. ஆனால் அது... அடிப்படை காரணம் கிடையாது. அந்த வழியில் நாம் ஒருபோதும் திரும்பவும் ஐக்கியத்துக்குள் திரும்பிச் செல்ல முடியாது. 34இப்பொழுது, இங்கே உட்கார்ந்து... இங்கே பாப்டிஸ்டை சேர்ந்த ஒரு மனிதன், அங்கே பெந்தெகொஸ்தைச் சேர்ந்த ஒரு மனிதன், அவர்கள் ஒருவருக்கொருவர் அவ்வளவு அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இருத்துவ பெந்தெகொஸ்தேயினர், மூன்றுத்துவ பெந்தெகொஸ்தேயினர் இன்னும் எத்தனைத்துவ பெந்தெகொஸ்தேயினரோ, உங்களுக்கு தெரியும், இவ்விதமாய் எல்லோரும் மற்றும் தேவ சபையினர் (Church of God) ஃபோர்ஸ்கொயர் (Foursquare); பாருங்கள்; ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அவ்வளவு அருகில் அமர்ந்து இருக்கின்றனர். ஒருவேளை அசெம்பிளி ஆப் காட் சபையினர் உங்களை பட்டணத்திற்குக் கொண்டு வருவார்களானால், மற்றவர்கள் அதற்கு ஒத்துழைப்பைக் கொடுக்கிறதில்லை. அவ்விதமே வேறு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் அழைத்து வருவார்களானால், மற்ற எவரும் ஒத்துழைப்பைத் தருவதில்லை, பாருங்கள். அவ்விதமாய் தான் காரியங்கள் காணப்படுகிறது. எனவே, நீங்கள் மக்களை ஸ்தாபனமாக்கி ஐக்கியத்திற்குள் கொண்டுவர முடியாது. அதை உங்களால் செய்யவே முடியாது. அது காரியத்தைச் செய்யாது. அது வேலை செய்யாது. அது தேவனுடைய திட்டமே இல்லை. 35எனவே, இப்பொழுது அவர்கள் செய்கிற பயங்கரமான காரியத்தை பார்த்தீர்களா? தேவன் எந்த காரியத்தையும் அழிக்கவில்லை; மனிதன் தான் தன்னுடைய ஞானத்தினால் தன்னை அழித்துக் கொள்கிறான். ஏதேன் தோட்டத்தில் இரண்டு விதமான மரம் இருந்தது. அதில் ஒன்று ஜீவமரம், இன்னொன்று அறிவு என்ற மரம். முதன்முதலில் மனிதன் அந்த அறிவின் மரத்திலிருந்து கடித்தபோது, அவன் தேவனுடைய ஐக்கியத்திலிருந்து பிரிந்து போனான். ஒவ்வொரு முறையும் அதிலிருந்து கடிக்கும்போது, அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். ஒரு விசை அவன் அதிலிருந்து வெடிமருந்தைக் கடித்த பின்பு, அவன் தன்னுடைய சக மனிதர்களைக் கொன்று போடுகிறான். அடுத்தது அவன் அறிவைக் கடித்தபோது அவன் உந்து வண்டிகளைக் (automobiles) கண்டுபிடித்தவுடன், அது வெடி மருந்துகளைக் காட்டிலும் அதிகம் பேரைக் கொன்றுப்போட்டது. இப்பொழுது அவன் அணுகுண்டை கண்டுபிடித்து வைத்திருக்கிறான். அதை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான்? பாருங்கள், அவன் தன்னுடைய அறிவைக் கொண்டு எப்பொழுதும் தன்னையே அழித்துக் கொள்கிறான். ஏன் அவன் இங்கிருக்கிற இந்த எளிமையான விசுவாச மரத்தினிடத்தில் திரும்பி வந்து விசுவாசிக்கக் கூடாது. பாருங்கள். அவன் செய்ய வேண்டியதெல்லாம் அதுதான். 36எனவே இப்பொழுது என்ன நடந்திருக்கிறதென்று கவனியுங்கள். இப்பொழுது மனிதன் ஒரு திட்டத்தை கொண்டிருக்கிறான் என்று இப்பொழுது நாம் அறிந்து கொள்கிறோம் (அதை அவர்கள் ரஷியாவில் கொண்டிருக்கிறார்கள், ஐக்கிய அமெரிக்க தேசத்திலும் அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள்) எப்படியெனில் விஞ்ஞானம் மூலம் அவர்கள் திரும்பிவரக் கூடிய வழியைக் கண்டுபிடிக்க இருக்கிறார்கள். எனவே கொஞ்ச நாட்களுக்கு முன்னர், ஆரம்ப நிலை முடக்கு வாதத்தால் (Infantile paralysis) பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு திரும்பவும் தசை வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு, விஞ்ஞானம் ஒரு பாட்டிலை ரஷியாவிற்குக் கொண்டு சென்றது. அதின் மூலம் அவனால் தசை வளர்ச்சியை பெற்றுக் கொள்ள முடியுமாம். அவர்கள் அந்த சிறிய பாட்டிலை எடுத்து அதை குலுக்கியபடி, “அந்த பாட்டிலில் நமக்கு சுகம் (healing) இருக்கிறது. இதில் நமக்கு சுகம் இருக்கிறது. இதில் நமக்கு... இதோ இதில் இரட்சிப்பு இருக்கிறது”, என்றார்கள். பாருங்கள், அது விஞ்ஞானம். அவர்கள் நிலவுக்குப் (moon) போக முயற்சிக்கிறார்கள். அது இன்னொரு பாபேலின் கோபுரமாயிருக்கிறது. எனவே இவ்விதமான பலதரப்பட்ட காரியங்கள் எல்லாம் இருக்கிறது. இந்த ஸ்பூட்னிக்ஸ் (sputniks)... நிலவுக்குப் போக வேண்டும் என்ற ஒரு பந்தயத்தில் இருக்கிறார்கள். ஆனால், சகோதரனே, நான் ஒரு பந்தயத்தில் இல்லை. எனவே, நான் ஒரு காரியத்தை உங்களுக்குக் கூறுகிறேன், நான் இங்கே ஒரு திட்டத்தை கொண்டிருக்கிறேன். நான் அல்ல, ஆனால் தேவன் அதைக் கொண்டிருக்கிறார். அதற்கான விற்பனையாளராக நான் இருக்கிறேன். எனவே நான் உங்களுக்குக் கூறட்டும், இப்பொழுது, அது உங்களை நிலவையும் தாண்டி நூறு பில்லியன், பில்லியன், மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கொண்டு செல்லுகிற திட்டமாய் இருக்கிறது. அது சரிதான். (குறிப்பு: 1 மில்லியன் - பத்து லட்சம்; 1 பில்லியன் - நூறு கோடி). எனவே, நீங்கள் நிலவுக்குச் செல்வீர்களானால் உங்களால் அங்கே உட்காரக் கூட முடியாது, ஏனெனில் அவர்கள் கூறுகிறார்கள், உங்களை அங்கே பிடித்து வைக்கக் கூடிய ஒருவிதமான காந்த விசை இல்லாத பட்சத்தில் நீங்கள் மிதக்க வேண்டியதாய் இருக்கும். உங்களால் ஒரு முழு இரவு கூட அங்கே தங்க முடியாது. அப்படி இருப்பீர்களானால், நீங்கள் குளிரில் உறைந்துபோய் மரித்துவிடுவீர்கள். பகலிலோ, வெப்பம் உங்களை சுட்டெரித்துவிடும். எனவே அங்கே போய், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் அங்கே போக விரும்பவில்லை. என்னுடைய வீடு என்று சொல்லக் கூடிய இடத்திற்கே நான் போக விரும்புகிறேன். அது அக்கரையில் இருக்கிறது. அது சரி. ஒரு நொடிப்பொழுதில் பறந்து, கண்ணிமைக்கும் பொழுதில் எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தராகிய இயேசுவுடன் என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படிக்கு அவரோடு அங்கே இருப்போம். ஏதோ ஒன்றில் போய் உங்களை இணைத்துக் கொள்ள முயற்சி செய்வதல்ல; ஆனால் நீங்கள் ஏற்கனவே இருந்த ஒன்றில் போய் என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படிக்கு செல்வதாயிருக்கிறது. அது எப்பேற்பட்ட மகிமையான காரியமாய் இருக்கும். 37இப்பொழுது, நீங்கள் கவனியுங்கள், இந்த எல்லா ஸ்தாபனங்களும், பிரிவினைகளும், விஞ்ஞானிகளும் மற்றும் அவர்களின் எல்லா... எல்லா கல்விகளும், எல்லா ஸ்தாபனங்களும், எல்லா பிரிவினைகளும், இனவேறுபாடுகளும் மற்றும் ஒவ்வொன்றும்... நாம் முக்கிய கோட்பாட்டையும் மற்றும் தேவன் மனிதனை ஐக்கியத்திற்குள் கொண்டு வரக்கூடிய ஒரே வழியையும் விட்டு விலகிப் போனோம். அதை நாம் இன... இன வேறுபாட்டை ஏற்படுத்துவதின் மூலம் செய்ய முடியாது. அந்த வழியில் நாம் செய்ய முடியாது. அதை நாம் தேசீயமாக்குதல் மூலமாகவும் செய்ய முடியாது. அவர்கள் ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே மொழி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நல்லது கொஞ்ச நாட்களுக்கு அது நீடிக்கும். எனவே மனிதன் அதை விரும்புவதற்கு ஒரே காரணம்... அதை ஜெர்மனி விரும்பினது. எல்லோரும் ஜெர்மன் மொழியில் பேச வேண்டும் என்றும், எல்லா தேசங்களும் ஜெர்மானிய மொழி பேச வேண்டும் என்றும் விரும்பினது. அவர்கள் ஜெர்மானிய மொழி பேசாத பட்சத்தில், அதற்குள் அவர்கள் இருக்கவில்லை என்று அர்த்தமாகிறது. நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, போயர்கள் (Boers) நினைப்பது... ஏதோ ஒரு வகையில் அவர்கள் அங்கீகரிக்கப்படாத மொழியை பெற்றிருக்கிறார்கள் எப்படியோ சிறிது... கொஞ்சம் பிரெஞ்சு மொழியையும், கொஞ்சம் ஆங்கில மொழியையும், கொஞ்சம் ஜெர்மன் மொழியையும், இவ்விதமாக இவையெல்லாம் சேர்ந்த ஒன்றாய் அது இருக்கிறது. அவர்கள், “ஓ, ஆயிரவருட அரசாட்சி வரும்போது, ஆயிர வருட அரசாட்சி இந்த மொழியைத்தான் பயன்படுத்தும்” என்று கூறுகிறார்கள். கிறிஸ்தவர்களும் அவ்விதமாய் நினைக்கிறார்கள். நல்லது, ஆங்கிலேயர்கள் இவ்விதமாய் நினைக்கிறார்கள்... உங்களுக்குத் தெரியும், அது பிரிட்டன் என்று, “ஓ, என்னே, நிச்சயமாக. ஆயிர வருட அரசாட்சியில் அது ஆங்கிலமாய் இருக்கும்”. நல்லது, அவர்கள் நிச்சயமாக ஆயிரவருட அரசாட்சியில் அமெரிக்க வழக்கு ஆங்கிலத்தை பேசுவார்கள் என்று நாம் கூறுகிறோம். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் ஆச்சரியப்படப் போகிறீர்கள். நாம் இதுவரை கேட்டிராத பரலோக மொழியை, அந்த மொழியைத் தான் நாம் பேசப் போகிறோம். அது நட்சத்திரங்களைக் கொண்ட அமெரிக்க தேசியக் கொடியும் இல்லை, ஸ்வஸ்திகா அடையாளமும் இல்லை. அல்லது... வட்டம், அரைவட்டம், அரிவாள் மற்றும் சுத்தியல் அடையாளமும் இல்லை. இதில் எந்த தேசியக் கொடியும் இருக்கப் போவதில்லை. ஆனால் அது பாடு மற்றும் அவமானத்தின் அடையாளமும், மிகவும் பரிசுத்தமான இரத்தத்தினால் கறைப்படுத்தப்பட்ட பழமையும் கரடுமுரடான சிலுவையாக இருக்கப் போகிறது. இதைத் தவிர வேறு தேசியக் கொடி இருக்கப் போவதில்லை. ஒரே கொடி, ஒரே ராஜா, (கிறிஸ்து இயேசு), ஒரே தேசம், ஒரே ஜனம், ஒரே மொழி இருக்கும் மற்றும் எல்லா கிறிஸ்தவர்களும் மறுபடியும் பிறந்தவர்களாய் இருப்பார்கள். அங்கே நேரம் அவ்விதமாய்தான் இருக்கும். 38இப்பொழுது, சரியாக ஏதேன் தோட்டத்திலேயே தேவன் திட்டத்தை வகுத்து, துவக்கத்திலேயே தேவன் மனிதனுடைய கரத்தின் கிரியையைக் கண்டனம் பண்ணினார். எப்படியெனில், மனிதன் முதல் தவறைச் செய்து, அத்தி இலை மார்க்கத்தின் மூலம், திரும்பி வரக் கூடிய வழியை முயற்சித்த போது, அதை தேவன் கண்டனம் பண்ணினார். எனவே அவர் என்ன செய்தார்? அவர் சில மிருகங்களைக் கொன்று, சில செம்மறியாட்டு தோல்களை எடுத்து (அதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன்), அவ்விடத்தில் வீசி எறிந்தார். எனவே அதன்மூலம் அது காண்பிப்பது என்னவெனில், இரத்தம் சிந்தப்பட வேண்டியதாய் இருக்கிறது. எப்படியெனில் இரத்தத்தின் மூலம் பாவ மன்னிப்பு உண்டாயிருக்கும், எப்பொழுதும் அது தேவனுடைய திட்டமாகும் மற்றும் அதுவே எப்பொழுதும் தேவனுடைய திட்டமாயிருக்கும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாயிருக்காது. எப்படி வேண்டுமானாலும்... நீங்கள் விரும்புகிற எந்த வழியிலும் அதை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா திட்டங்களும் விழுந்து போகும், ஆனால் அது விழுந்து போகாது. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது. அங்கே துவக்கத்தில் தேவன் அவ்விதமாய் திட்டம் செய்தார். எனவே மறுபடியும் தேவனோடு மற்றும் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரே வழி, அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே உண்டாயிருக்கும். எனவே அவர்... ஆட்டுக் குட்டியையோ அல்லது செம்மறியாட்டையோ கொன்று, ஆட்டுத்தோலைக் கொண்டு வந்தார். ஏதோவொன்று அவர்களை மூடும்படிக்கு மரித்தது, அது சரியாக... அதை ஸ்தாபனமாக்க முடியாது, அதை கல்வியைக் கொண்டு போதிக்க முடியாது. அதை விஞ்ஞான பூர்வமாக, மாற்றமுடியாது. ஏதோ ஒன்று உங்களுக்காக மரித்தது என்ற விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. அது தான் ஐக்கியத்தை கொண்டு வருகிறதாய் இருக்கிறது. 39ஆகவேதான், அதை யோபு விசுவாசித்தார். அது வேதாகமத்தில் மிகவும் பழமையான புத்தகம். இரத்தம் சிந்துதலை யோபு ஏற்றுக் கொண்டார். செம்மறியாட்டைக் கொன்று ஏறெடுக்கப்படும் சர்வாங்க தகன பலியை அவர் ஏற்றுக் கொண்டார். எனவே நினைவு கொள்ளுங்கள். அதில் அவர் உறுதியாக நின்றார். எல்லாமே அவருக்கு எதிராக வந்தும், அவருடைய சபை அங்கத்தினர்களும் கூட, “யோபு, நீ பாவம் செய்தாய், நீ தேவனுக்கு எதிராக மீறுதல் செய்தாய்”, என்றனர். சிறிது நேரம் யோபுவைப் பற்றிப் பார்ப்போம். அப்படிப்பட்ட பலியை அவர் செலுத்தினார் என்று நாம் பார்க்கிறோம். அவருடைய பிள்ளைகளுக்காக பாவ நிவாரன பலியை அவர் செலுத்தினார். அவர், “ஒருவேளை அவர்கள் பாவம் செய்திருக்கலாம். தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கலாம். எனவே, அவர்களுக்காக நான் சர்வாங்க தகனபலியை ஏறெடுக்கட்டும்”, என்றார். அது அருமையாக இல்லையா? இன்றைக்கு அவ்விதமான மக்கள் நமக்கு இருந்தால், நம்முடைய தாய்மார்களும், தகப்பன்மார்களும், நம்முடைய பிள்ளைகள் மீது அவ்வளவான அக்கறையை எடுத்துக் கொண்டு, அவர்களைத் தெருவில் இருக்கும் யாரோ ஒரு கீழ்தரமான புகை பிடிப்பவனோடு போவதற்கு விட்டுவிட்டு மற்றும் இங்கிருக்கும் ராக் அண்டு ரோல் பார்ட்டிகள் இன்னும் அதுபோன்ற காரியங்களுக்கும், மேலும் அவர்கள் விரும்புகிற வழியில்... அதற்குப் பதிலாக அவர்களை வீட்டில் இருக்கும்படி செய்து, அவர்களுக்காக ஜெபக் கூட்டத்தில் ஜெபிப்போமானால், அது ஒரு வித்தியாசமான உலகமாயிருக்கும். அதுசரியே. யோபு, “ஒரு வேளை... என் மகன்களும், மகள்களும் பாவம் செய்திருப்பார்கள் என்று என்னால் கூறமுடியாது. ஆனால் அவர்கள் அப்படி செய்திருப்பார்களானால், நான் சர்வாங்க தகனபலியை செலுத்தும்படிக்குத் தீர்மானிப்பேன். ஆதலால் நான் சர்வாங்க தகனபலியைச் செலுத்துவேன்”, என்றார். 40எனவே சோதனைகளும், கவர்ந்திழுக்கும் (பாவ) கவர்ச்சிகளும் வரும்போது... இப்பொழுது, யோபு தேவனால் அருளப்பட்ட வழியை எடுத்துக் கொண்டு இரத்தப் பலியையும், சர்வாங்க தகனபலியையும் எடுத்துக் கொண்டு, அதோடு நின்றான். எனவே சோதனைகளும், பரிட்சைகளும் வந்தபோது, மேலும், அதற்காக ஸ்தாபனத்தின் மேல் நிற்பதாய் இருந்திருக்குமானால், எப்பொழுதோ அவன் வீழ்ந்திருப்பான். அதுவே விஞ்ஞானமாய் இருந்திருக்குமானால், எப்பொழுதோ அவன் விழுந்திருப்பான், ஏனெனில் அவன்... அவனிடத்திலிருந்த யாவும் எடுக்கப்பட்டன. அவனுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டு, அவனுடைய ஆஸ்திகள் எடுக்கப்பட்டு, அவனுடைய ஆரோக்கியம் சீர்குலைந்து, அவனுடைய மனைவியும், யோபுவே, “ஏன் தேவனை சபித்து, ஜீவனை விடக்கூடாது” என்று கூறுகிற அளவுக்கு அவன் சாம்பல் குவியலில் அமர்ந்து, ஒரு ஓட்டை எடுத்துக் கொண்டு தன்னுடைய கொப்புளங்களைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அவன், “பைத்தியகாரி பேசுவது போல நீ பேசுகிறாய்” என்றான். அவன் அவளைப் பைத்தியக்காரி என்று கூறவில்லை, ஆனால் அது போல பேசுகிறாய் என்று கூறினான். “நீ பைத்தியக்காரி பேசுவது போல பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக் கொண்டார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்”, என்றான். அங்கே அவர்கள் வந்தபோது... அவனுடைய தேற்றரவாளர்கள் அவனுடைய சபை அங்கத்தினர்கள் அங்கே வந்து, அவனைக் குற்றப்படுத்தினார்கள். இருப்பினும் தான் நீதிமான் என்று அவன் அறிந்திருந்தான் ஏனெனில் அவன் தன்னுடைய தகுதிகளின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் தேவனுடைய கோரிக்கைகளைச் சந்தித்திருந்தான். ஏனெனில், அவன் அந்த இரத்த பலியோடு நின்றான். ஆம் ஐயா. அவன் தான் நீதிமான் என்று அறிந்திருந்தான். காரணம் அவன் தேவனுடைய கோரிக்கைகளைச் சந்தித்திருந்தான். எனவே நீங்கள் கவனியுங்கள் நீங்கள் மட்டும் தொடர்ந்து பிடித்துக் கொண்டு... இரத்தபலியின் மேல் நிற்பீர்களானால், வேறு எதையும் செய்ய வேண்டாம். உங்களுடைய ஸ்தாபனத்தைச் சேர்ந்திருப்பீர்களானால், அது எல்லாம் பரவாயில்லை. கல்வியறிவை பெற்றிருப்பீர்களானால், அது அருமையானதுதான். விஞ்ஞானம் அதுவும் பரவாயில்லை. ஆனால் முதலில், அந்த இரத்தத்திற்குள் உங்களை வையுங்கள். இரத்தம், அந்த இடம் மட்டுமே ஐக்கியத்தின் இடமாயிருக்கிறது. 41இப்பொழுது கவனியுங்கள், “யோபு என்ன தான் நடந்திருந்தாலும்; எதை இழந்திருந்தாலும், அவனுடைய சபை என்ன கூறியிருந்தாலும்; யார் என்ன கூறியிருந்தாலும்; அவன் தேவனுடைய கோரிக்கைகளைச் சந்தித்திருந்தான் என்பதை அறிந்திருந்தான். சர்வாங்க தகனபலியாகிய இரத்தத்தின் பேரில் அவன் நின்றிருந்தான். கவனியுங்கள், அவனுடைய சோதனை நேரத்தின் கடைசி மணி வேளை வந்தபோது அவர்கள் அவனிடத்தில் தேவனைச் சபித்து ஜீவனை விடு என்றும்; இன்னும் அது போன்ற காரியங்களைக் கூறினார்கள்”, ஆனால் அவனோ, “நீ பயித்தியக்காரி போல பேசுகிறாய்” என்றான். அதன்பின் எலிகூ (Elihu) வந்தான். யெலி (Eli), யெல் (EI) என்றால் “தேவனுடைய பலத்தவன்”, அவனுடைய பெயரின் அர்த்தத்ததைப் பார்ப்பீர்களானால், நீங்கள் தேவனையும் மற்றும் கிறிஸ்து அவரைப் பிரதிநிதிப்படுத்துவதையும் பார்க்கமுடியும். அவன் வந்து, யோபுவை ஒரு பாவி என்று குற்றப்படுத்தவில்லை. ஆனால் யோபு, தேவன் எங்கே இருக்கிறார் என்றும் அங்கே போய் அவருடைய கதவைத் தட்டி, அவரிடத்தில் பேச வேண்டும் என்றும் விரும்பினான். எலிகூ அவனிடத்தில் கூறினான், ஒருவர் இருக்கிறார், நீதிபரராகிய அவர்தாமே இடைவெளியில் நின்று; பாவ மனிதனையும் (sinful man) பரிசுத்த தேவனையும் (holy God) இணைத்து; பாவ மனிதனையும், பரிசுத்த தேவனையும் ஒப்புரவாக்குவார்; என்றாவது ஒரு நாளில் உண்மையான இரத்த காணிக்கையானது வரும். 42யோபு, அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததினால், ஆவியானவர் அவன் மேல் வந்தவுடன், அவன் ஆவிக்குள்ளானான். இடிகள் முழக்கமிடத் துவங்கின. மின்னல்கள் மின்னத் துவங்கின. அப்பொழுது அவன் தன் காலுன்றி எழுந்து நின்று, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்”, என்றான். அந்த அசலான நபர் வரும் வரைக்கும் அவன் இந்த இரத்த காணிக்கையைக் (gypia) கொண்டு சென்றான். அவன் இதைக் கண்ட போது அதை வரப் போகிற ஒருவருக்கு நிழலாகக் கண்டான், காரணம் அங்கே ஏதேன் தோட்டத்தில் தேவன் இதைக் கோரினார் (required). எனவே யோபு அந்த பலியைத் தொடர்ந்து செலுத்தி வந்தான். ஆம், ஐயா. இரத்தத்தின் கீழாக, அந்த ஓரிடத்தில் தான் தேவன் மனிதனைச் சந்திப்பதாக வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலைச் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் அந்த ஓரிடத்தில் மட்டுமே தேவன் இஸ்ரவேலைச் சந்தித்தார். செம்மறி ஆட்டுக்குட்டி கொல்லப்பட்ட அவ்விடத்திற்கு தேசத்தின் எல்லாவிடத்திலிருந்தும் அவர்கள் வந்தார்கள், ஏனெனில் தேவன் அவர்களைச் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்மட்டுமே சந்தித்தார். செம்மறி ஆட்டுக்குட்டி இரத்தத்தின் கீழ் மட்டுமே தேவனைச் சந்திக்கிற இடமாக இருந்தது. அங்குதான் அவர் தன்னுடைய ஜனங்களைச் சந்தித்தார். அங்குதான் அவர் தன்னுடைய சபையைச் சந்தித்தார். இரத்தத்தின் கீழ், அங்குதான் அவர் உன்னுடைய தேவைகளைச் சந்திக்கிறார். இரத்தத்திற்கு வெளியே மன்னிப்பும் இல்லை அல்லது கேட்கப்படுதலும் (hearing) இல்லை. இரத்தத்தின் கீழ் மட்டுமே ஆகும். 43இப்பொழுது, நாம் எண்ணாகமத்துக்குத் திருப்புவோம், எண்ணாகமம் பத்தொன்பதாவது அதிகாரம், அங்கே அவர்கள் யாத்திரையில் இருந்தபோது, தேவன் அவர்களிடத்தில் நீங்கள் சென்று ஒரு சிகப்புக் கிடாரியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இப்பொழுது இதை, இந்த அடையாளத்தைக் கவனியுங்கள். எனவே, நீங்கள் போய் நுகத்துக்கு உட்படாத ஒரு சிவப்புக் கிடாரியை கொண்டு வாருங்கள். அவள் நுகத்துக்கு உட்படாதவளும், இதற்கு முன்பு நுகமானது வைக்கப்படாதவளுமாய் இருக்க வேண்டும். மேலும் அவள் தாமே சிவப்பாகவும், எல்லாவிடங்களிலும் சிவப்பாகவும் இருக்க வேண்டும். இப்பொழுது சிவப்பு அநேகருக்கு அது ஒரு நல்ல நிறமாய் இருக்காது. சிவப்பு என்றால் போக்குவரத்து மற்றும் அது போன்றவைகளுக்கு நிற்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. மேலும் சிவப்பு என்பது பாவ நிவாரண அடையாளமாகவும் இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் எப்பொழுதாவது விஞ்ஞான ரீதியாக சிவப்பு நிறத்தை எடுத்து, அதை சிவப்பு நிறம் மூலமாக பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சிவப்பு நிறத்தை, சிவப்பு நிறம் மூலமாக பார்ப்பீர்களானால், சிவப்பு வெள்ளையாகத் தெரியும். சிவப்பை சிவப்பு மூலமாக பார்க்கும் போது, அது வெள்ளையாகத் தெரியும். அவ்விதமே, தேவன் நம்முடைய பாவங்களைப் பார்க்கும் போது. இரத்தாம்பரம் போல சிவப்பாயிருந்தாலும், அவை பனியைப் போல வெண்மையாகும். எனவே தன்னுடைய சொந்த குமாரனின் இரத்தத்தின் மூலமாக அவர் நம்மைப் பார்க்கும் போது, அவர் நம்மை இரத்தாம்பர சிவப்பான பாவிகளாகப் பார்ப்பதில்லை. நாம் அவருடைய இரத்தத்தின் கீழாக இருந்து, அவருடைய குமாரனின் இரத்தத்தில் கழுவப்பட்டவர்களாய் இருக்கும் போது, அவர் நம்மைப் பனியைப் போன்ற வெண்மையாகப் பார்க்கிறார். ஓ, வேதாகமம் மற்றும் அதின் எடுத்துக் காட்டுகள் எவ்வளவு அழகாயிருக்கிறது. சிவப்பை சிவப்பு மூலமாக ப்பார்க்கும் போது வெள்ளையாகத் தெரியும். அதை நான் கவனிக்கும்போது, அது நமக்கு ஒரு மகத்தான அடையாளமாக, ஒரு பாவ நிவாரண (atonement) அடையாளமாக இருக்கிறது. கிறிஸ்துவுக்கு அடையாளமான, சிவப்புக் கிடாரி, இப்பொழுது சாயங்கால நேரத்தில் கொல்லப்பட வேண்டி இருக்கிறது. எனவே, கிறிஸ்து வந்தபோது, அவர் பரிசேயர்களுடனோ அல்லது சதுசேயர்களுடனோ பிணைக்கப்படவில்லை. அவர் பிதாவாகிய ஒருவருடன் மட்டுமே பிணைக்கப்பட்டிருந்தார். அவரும், பிதாவும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஒருவரே. அவ்விதமாகத்தான் கிறிஸ்தவனும் இருக்கவேண்டும். நீங்கள் மெதொடிஸ்டோ, பாப்டிஸ்டோ, பெந்தெகொஸ்தோ, யாராயிருந்தாலும் நீங்கள் முதலாவது இயேசு கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். உம்முடைய பாரத்தை என் மீது வைத்துவிட்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். எனவே நீங்கள் கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் போது, அது மறுபடியும் உங்களை தேவனுடனான இணைப்புக்குள்ளும், ஐக்கியத்திற்குள்ளும் கொண்டு வருகிறது. 44நாம் கவனிக்கிறோம். இப்பொழுது... எல்லா சபையார் முன்பும் சாயங்கால வேளையில் சிவப்பு கிடாரியானது கொல்லப்பட வேண்டியதாய் இருக்கிறது. இப்பொழுது அவள் கொல்லப்படும் போது, அவளுடைய சரீரமானது எரிக்கப்பட வேண்டும்... குளம்புகளையும் மற்றும் யாவையும், அதுதாமே பிரித்தெடுக்கும் தண்ணீராகச் செய்யப்பட வேண்டும். அதை நாம் எபேசியர் புத்தகத்தில் பார்க்கிறோம், அது நாம் வார்த்தையின் தண்ணீரினால் கழுவப்படுகிறதைக் காண்பிக்கிறது. பிரித்தெடுக்கும் தண்ணீர் என்பது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அது, அந்த வார்த்தையானது, சுத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டும், ஏனெனில் எந்த வழிபோக்கனாவது அல்லது எந்தப் பாவியானவனாவது சபைக்குள் பிரவேசிக்க வரும்போது, இங்கே இது சுத்தமான இடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் சபைக்குள் பிரவேசிக்க அவர்கள் பூசும்படிக்கு இரத்தத்தை எடுத்து, பிரதான ஆசாரியனான எலியெசரின் விரலினால் ஏழு முறை அதை கதவின் மேல் பூச வேண்டும், இப்பொழுது கவனியுங்கள், அது எவ்வளவு அழகாயிருக்கிறது என்று. ஓ, அதை நீங்கள் தவறவிடமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். கவனியுங்கள். முதலாவது காரியம் என்ன? இப்பொழுது என்னுடைய பாப்டிஸ்டு, மெத்தொடிஸ்டு, மற்றும் பெந்தெகொஸ்து சகோதரர்களே, கொஞ்ச நேரத்திற்கு உங்கள் மேலுறைகளைக் கழற்றிவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வேறொன்றையும் பார்க்காமல், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 45கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இதின் மேல் ஒரு ஐக்கிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது ஐக்கிய அமெரிக்க தேசத்திலிருக்கும் பிரபலமான ரபீக்களில் ஒருவர் என்னை அங்கே பின்புறமாக சந்தித்து, “இது மாதிரி என் வாழ்நாளில் நான் கேட்டதேயில்லை”, என்றார். அவர் ஒரு ரபீயாக தொடர்ந்து இருந்து வருகிறார், ஒரு ரபீக்கு பிறகு இன்னொரு ரபீயாக, இன்னொரு ரபீயாக வந்த ரபீக்களின் சந்ததியில் வந்தவராயிருக்கிறார். இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்ற ஒரு பெந்தெகொஸ்தே ரபீயாக இருக்கிறார். நான் அவரோடு கூட ஷிரிவ்போர்ட்டில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சீமாட்டி அவரிடம், “ஐயா, ரபீ, உங்கள் அறையில் வைக்கும் படிக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டியை (T.V) நான் வைத்திருக்கிறேன்”, என்றாள். அதற்கு அவர், ''அது தொலைக்காட்சிப் பெட்டி (Television) அல்ல, அது ஒரு நரகக் காட்சிப் பெட்டி. அதை அங்கிருந்து அகற்றி விடு“, என்றார். அவள், “ஏன், நீங்கள் ஒரு ரபீ அல்லவா?” என்றாள். அவர், “நான் ஒரு பெந்தெகொஸ்தே ரபீ, தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக. ஆம்”, என்றார். 46இப்பொழுது இந்த அடையாளத்தைக் கவனியுங்கள். இப்பொழுது கிடாரியானது எரிக்கப்பட வேண்டும். அதினோடு கூட ஈசோப், கேதுரு மற்றும் இரத்தாம்பரம் எரிக்கப்பட வேண்டும். இவையாவும் கிடாரியோடு கூட சேர்த்து எரிக்கப்பட வேண்டும். இப்பொழுது கவனியுங்கள், கேதுரு என்பது சிவப்பு மரம்; சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணக் கறைகள் படிந்த மரம், சிலுவைக்கு அடையாளமாய் இருக்கிறது. இரத்தாம்பரம் என்பது ஆட்டுகடாவின் ரோமம், அது இரத்தத்தில் தோய்க்கப்பட்டதாயிருக்கிறது மற்றும் ஈசோப்பு என்பது அதை தோய்ப்பதற்கு பயன்படும் பூண்டு வகை தாவரம். ஈசோப்பைக் கொண்டுதான் நீங்கள் இரத்தத்தைப் பூசுகிறீர்கள், இந்த இரத்தமானது இரத்தாம்பர கேதுரு மரத்தின் மேல் பூசப்பட்டு, இவையாவும் ஒன்றாக எரிக்கப்பட வேண்டும். எதைச் செய்வதற்கு? பிரித்தெடுக்கும் தண்ணீரைப் பெறுவதற்கு. பிரித்தெடுக்கும் தண்ணீர் செய்யப்பட்டு, சுத்தமான இடத்தில் வைக்கப்பட்டது. இப்பொழுது, அவ்விடத்திற்கு ஒரு பாவி வருகிறான். அவன் அசுத்தமாயிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், பிரித்தெடுக்கும் தண்ணீர் (சாம்பல் தண்ணீருடன் கலக்கப்பட வேண்டும். அதற்கு அர்த்தம் என்னவெனில் ஜீவ ஆவி இன்னும் அது போன்றவைகளை தெரிவிக்கிறதாயிருக்கிறது), ஆனால் அவன் தன்னுடைய பாவங்களினிமித்தம் பிரித்தெடுக்கும் தண்ணீரினால் தெளிக்கப்பட வேண்டிதாயிருக்கிறது. 47இப்பொழுது என் பாப்டிஸ்டு சகோதரர்களே, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீதிமானாக்கப்படுதலை மட்டுமே தேவன் எதிர்பார்ப்பாரானால், நான் இதை உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். ஒரு மனிதன் பிரித்தெடுக்கும் தண்ணீரினால் தெளிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டாலும், இன்னும் அவனால் கர்த்தருக்கு மகிமையின் ஆராதனைக்குள்ளாக நுழைய முடியாமற் போகிறது. அவனால் அதைச் செய்ய முடியாமற் போகிறது, காரணம் அவன் தன்னுடைய பாவங்களிலிருந்து தெளிக்கப்பட்டு மட்டுமே இருக்கிறான். அது அவனைப் பாவங்களிலிருந்து பிரித்தெடுத்ததே தவிர, அது அவனை ஐக்கியத்திற்குள் கொண்டு வரவில்லை. அது சரியே. அது அவனை அவனுடைய பாவத்திலிருந்து மட்டுமே பிரித்தெடுத்தது. இப்பொழுது, எபேசியர்கள், “நாங்கள் வார்த்தையின் தண்ணீரினால் கழுவப்பட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். எனவே நீங்கள் வார்த்தையைக் கேட்டு; எவ்வாறு இருக்க விரும்புகிறீர்களோ அவ்வளவு பயபக்தியாக நீங்கள் இருந்தாலும், மேலும் உங்கள் மேய்ப்பர் ஒரு வேதாகம புலமை பெற்றவராயிருந்தாலும், மேலும் உங்கள் இறைமையியல் முனைவர் பட்டம் (D.D) நிமித்தம் நீங்கள் கற்றறிந்தவராக இருந்தாலும், அது நம்மை அவருடைய ஐக்கியத்திற்குள் கொண்டு வராது. இல்லை ஐயா, அது அதைச் செய்யாது, காரணம் அவர்கள் பாவத்திலிருந்து பிரிக்கப்பட்டு மட்டுமே இருக்கிறார்கள். இப்பொழுது அது, நீதிமானாக்கப்படுதல் மார்டின் லூத்தரின் போதனை. அதை நாம் அறிந்திருக்கிறோம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல், அது ஐக்கியத்தைக் கொண்டு வராது. 48இப்பொழுது, அடுத்து இந்த விசுவாசி என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தன்னுடைய பாவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதும், அவன் என்ன செய்தான்? அடுத்த காரியம், பிரகாரத்திற்குப் போகும்படி அவன் அனுமதிக்கப்பட்டான், எனவே அவன் அங்கே செல்லும் போது... (கவனியுங்கள், ஓ, என்னே, நான் அதைக் குறித்துப் பேசும் போது, நான் பக்தி பரவசமடைகிறேன்). கவனியுங்கள், அடுத்து அவன் கவனிக்க வேண்டிய காரியம், எப்படியெனில்... அவனுக்கு முன்பாக ஏழு முறை பூசிக் காண்பிக்கும்படி இரத்தம் இருந்தது. ஏழு முறை பூசுதல் என்பது ஏழு சபை காலங்கள் அல்லது ஏழாயிரம் வருடங்கள் என்பதைக் குறிக்கிறது மற்றும் ஒவ்வொரு காலமும் இரத்தத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். ஆதியாகமம் துவங்கி வெளிப்படுத்தல் வரைக்கும், ஏதேன் துவங்கி ஆயிரவருட அரசாட்சி வரைக்கும் வேறு காரியமோ, வேறு வழியோ இல்லை; அது இரத்தமாயிருக்கிறது. இரத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை. இன்னொரு காரியம், இதை விசுவாசியானவன் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நோக்கி வரும் இந்த விசுவாசி... இப்பொழுது, இன்னும் அவன் ஐக்கியத்திற்குள் வரவில்லை. அவன் தன்னுடைய பாவங்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் அவன் ஐக்கியத்திற்குள் வராமல் இருக்கிறான். அவனுக்கு முன்பாக இரத்தமானது சென்றிருக்கிறது என்பதை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு முன்பாகச் சென்ற ஏதோ ஒன்று மரித்திருக்கிறது; மற்றும் எபிரெயர் 13:12 மற்றும் 13-ல் தன்னுடைய சொந்த ஜனங்களைப் பரிசுத்தம் செய்யும்படிக்கு இயேசு பாளயத்திற்குப் புறம்பே பாடுபட்டார் என்று கூறுகிறது. மெத்தொடிஸ்டுகளாகிய உங்களை அதுதாமே தகுதிப்படுத்துகிறதாய் இருக்கிறது. சரிதான், அது பரிசுத்தமாகுதலைக் கொண்டு வருகிறது. இருப்பினும் அது ஐக்கியத்துக்குள்ளாகக் கொண்டு வருவதில்லை, இன்னுமாக அது அதைச் செய்யவில்லை. ஆனாலும் அவர்கள் சென்றவுடன்... அவன் உள்ளாக, கட்டிடத்திற்குள்ளாக இருக்கிறான். உங்களால் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங் கொண்டு, ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ள முடியும், ஆனால் தேவனோடு இன்னும் ஐக்கியத்திற்குள் வர முடியாமல் இருக்கிறது. 49எனவே, அப்பொழுதெல்லாம், வருடத்திற்கு ஒருமுறை பிரதான ஆசாரியனானவன் (ஓ, என்னே!) ஒரு குறிப்பிட்ட வகையில் உடை உடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகையில் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். எப்படியெனில் சாரோனின் ரோஜாவின் சுகந்த வர்க்கத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அதை ஆரோனின் தாடியின் மேல் வைப்பார்கள், அது அவனுடைய உடையின் நுனிவரைக்கும் வழிந்தோடும். அவன் விசேஷித்த வகையில் ஆயத்தம் பண்ணப்பட்ட உடைகளை அணிந்திருக்க வேண்டும். மேலும் இன்னொரு காரியம், அவன் குறிப்பிட்ட விதமாக நடக்க வேண்டும். மற்றும் அவனுடைய உடையின் நுனியில் ஒலியெழுப்பும் மணியும், மாதுளையும் தொங்கிக் கொண்டிருக்கும், ஒரு மணியும், ஒரு மாதுளையும். அதுதாமே, “பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம்”, என்பதற்கு ஏற்ப ஒலி எழுப்பும் வகையில் அவன் நடக்க வேண்டும். அவன் என்ன செய்கிறான்? அவன் உண்மையான ஐக்கியமான, ஷெகினா மகிமையை நோக்கி நெருங்கிப் போகிறான். அல்லேலூயா! இப்பொழுது, கவனியுங்கள், அவன் ஒரு விதமான சத்தத்தை எழுப்ப வேண்டும். அந்த ஒரு வழியில் மாத்திரமே அவன் மரிக்கவில்லை என்று சபையார் அறிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அவர்களால் அந்த சத்தத்தை கேட்க முடிகிறது. நான் உங்களுக்குக் கூறுகிறேன், அவ்விதமே ஒரு சபையும் அதன் சத்தத்தை எழுப்பாமல் இருக்குமானால், உலகத்துக்கு நடந்தது அதற்கும் அவ்வளவு நிச்சயமாக நடந்திருக்கிறது; காரணம் எங்கெல்லாம் ஷெகினா மகிமை இருக்கிறதோ, அங்கெல்லாம் சத்தம் உண்டாயிருக்கும். கவனியுங்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த மனிதன்... எனவே ஆரோன் உள்ளே சென்ற போது, இரத்தத்தை ஏந்தினவனாய், உள்ளே நடந்து சென்றபோது, அந்த மணிகளும், பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம்; பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம்; என்பதற்கேற்ப ஒலியை எழுப்ப, அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய், மகா பரிசுத்தத்திற்குள் நடந்து செல்கிறான். அப்பொழுது அந்த மனிதனைக் குறித்து சபையார் எவ்வளவாக ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அவ்விதமாக ஒரு நாள் அவன் உள்ளே சென்று, தன்னுடைய கரத்தில் இருந்த பழைய கோலை அங்கேயே விட்டுவிட்டான். அவன் மறுபடியும் உள்ளே சென்ற போது, வெறுமனே பழைய குச்சி, மரித்துப்போன அந்த கோல் ஜீவனைப் பெற்று, துளிர்த்து, பூக்களைப் பூத்திருந்தது.(ஆம் ஐயா), ஏனெனில் அது ஷெகினா மகிமையில் கிடத்தப்பட்டிருந்தது. வியூ நான் உங்களுக்குக் கூறுகிறேன். உலகத்திற்கும் அவ்விதமே அவ்வளவு நிச்சயமாக அது செய்யும். அவ்விதமே ஷெகினா மகிமைக்குள் வருகிற ஒரு நீண்ட நாட்களாக மரித்திருக்கிற சபையை அது எடுத்து விசுவாச சபையாக... பூப்பூக்கும்படிக்கு செய்யும்... ஆம் ஐயா. 50என்ன நடந்தது என்று கவனியுங்கள். இதோ இங்கே இவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய், பின்னாக உள்ள அவ்விடத்தில் உள்ளே சென்றான், அப்பொழுது அவர்கள் அவனை கவனித்து, அந்த மணிகளின் (bells) சத்தத்தை கேட்க முடிந்தது. ஆரோன் கிருபாசனத்தண்டை ஷெகினா மகிமையில் நின்று கொண்டிருக்க, கிருபாசனத்தைப் பாதுகாக்கும் கேரூபின்களும் தங்களுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று படும்படி தொட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது அவர்களால் உள்ளே கவனித்துக் கேட்க முடிந்தது. ஓ, அப்பொழுது அவர்களுடைய இருதயங்கள் உள்ளே போக வேண்டும் என்று எவ்வளவாய் ஏங்கினது. பரிசுத்தம், பரிசுத்தம், “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்று ஒலிக்க, அது ஆரோனுக்கு என்ன செய்திருக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள். ஓ, அவன் ஒவ்வொரு வருடமும் உள்ளே போகும்படிக்கு ஜீவித்திருந்தான். அவ்விடத்துக்கு வந்து கொண்டிருந்த சபையாரால் எப்படியாக உள்ளே போகமுடியாமல் இருந்தது, அவர்கள் இரத்தத்தின் கீழாக ஜீவித்த போதிலும், அவர்களால் ஷெகினா மகிமைக்குள் பிரவேசிக்க முடியாமல் இருந்தது. ஆனால் தேவனுடைய குமாரனாகிய, கர்த்தராகிய இயேசுவின் இரத்தமாகிய, உண்மையான இரத்தம் வந்தபோது, அவர் பிரிவினையின் நடு மதிலை உடைத்துப் போட்டார். மேலும் அவர் திரைச்சீலையை மேலிருந்து அடிபாகம் வரைக்கும் கிழித்துப் போட்டார். எனவே இப்பொழுது விருப்பமுடைய எந்த விசுவாசியும், ஷெகினா மகிமைக்குள் பிரவேசிக்க முடியும். மற்றும் ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து நீதிமானாக்கப்படுதல் மூலமாகவும்; பரிசுத்தமாக்கப்படுதல் மூலமும் தன்னுடைய பாவங்கள் கழுவப்படுதலாலும்; அவன் பெந்தெகொஸ்தே ஷெகினாவுக்குள் பிரவேசிக்கக் கூடிய நபராகிறான். பெந்தெகொஸ்தே நாளில் தேவன் அதே காரியத்தை தான் செய்தார். அவர் நீதிமானாக்கப்படுதல் மூலம் சபையை இரட்சித்த போது (ரோமர் 5:1); பரிசுத்தமாக்கப்படுதல் (அது பரிசுத்த யோவான் 17:7 என்று நினைக்கிறேன்). “பிதாவே, உம்முடைய சத்தியத்தின் மூலம் இவர்களைப் பரிசுத்தப்படுத்தும், உம்முடைய வார்த்தையே சத்தியம்”, என்று அது கூறுகிறது. ஆகவே தான் பெந்தெகொஸ்தே நாளன்று பிரிவினையின் நடு மதில் உடைக்கப்பட்டு, திரைச்சீலையும் மேலிருந்து கீழ்மட்டும் கிழிக்கப்பட்டது, விசுவாசியும் ஷெகினா மகிமைக்குள் பிரவேசித்தான், தேவனுடைய வல்லமை அவன் மேல் கொட்டப்பட்டது. பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்கு பரிசுத்தம் என்று துதிகளும், மகிமைகளும், அந்நிய பாஷைகளில் சத்தமிடப்பட்டது. அவர்களும் அங்கிருந்து ஆரவாரமிட்டபடி, களிப்போடு வந்தார்கள். 51ஐக்கியத்தின் இடம் அது ஒன்று மட்டுமே. சகோதரனே, அந்த ஒரு இடம் மட்டுமே, அங்கே அவர்கள் ஷெகினா மகிமைக்குள் பிரவேசித்து, யூதனையும், கிரேக்கனையும், வெள்ளையனையும், கருப்பனையும், மஞ்சள், பழுப்பு நிறமுடையவனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்றாக அமரச் செய்கிறது. அவர்களுக்குள் எந்த அவமானமும் இருக்கவில்லை. இன்றைக்கு பெந்தெகொஸ்தே சபையில் அதுதான் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன், சகோதரர்களே. மக்கள் அவ்வளவாக வெட்கப்படுகிறார்கள் என்று நாங்கள் அறிந்து கொண்டோம். எப்படியெனில் அவர்கள், “ஆமென்” என்று சொல்வதற்கும் வெட்கப்படுகிறார்கள். கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குக் கூட அவர்கள் வெட்கப்படுகிறார்கள். சில பிரசங்கிமார்கள் எழுந்து நின்று, தசைபிடிப்பினால் பாதிக்கப்பட்ட கன்றுக் குட்டியைப் போல் “ஆஆமென்” (ahhhmen) என்கிறார்கள். அவர்கள் நடப்பது... இவ்விதமாக விறைப்பாக நடந்து... அதை நான் வெறுக்கிறேன். நான் விரும்புவது... எந்த ஒரு... மிகப் பெரிய பகட்டான, மற்ற சபைகளைப் போல நடிக்க முயற்சிக்காமல், எழுந்து நின்று நல்ல, அருமையான, பழைய இராகமுள்ள பாடலைப் பாடவே விரும்புகிறேன். அதுவல்ல ஐக்கியம். நான் எதையாவது வெறுப்பேன் என்றால்... (சில நிமிடங்களுக்கு முன்பு நான் கூறின வார்த்தையை மன்னித்துவிடுங்கள். அவ்விதமாக கூறவேண்டும் என்று நான் எண்ணவில்லை. என்னை மன்னியுங்கள்). ஆனால் சபையானது மிகவும் பிடிவாதமாகவும், ஏனோதானோ என்றிருப்பதை நான் நினைக்கும்போது, ஓ, என்னே! என்ன தான் ஆனது? அவர்கள் அங்கே எழுந்து நின்று பாட முயற்சிப்பதைப் பார்த்திருப்பீர்கள். 52கொஞ்ச நாட்களுக்கு முன் பரிசுத்த சபையில் (Holiness Church) நின்று கொண்டிருந்தேன், அங்கே பின்பக்கத்தில் ஒரு பாடற்குழு நின்று கொண்டிருந்தது. நான் ஒரு காரியத்தை மிக மோசமாகச் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். அங்கேயிருக்கும் மேய்ப்பரின் தியான அறையில் நான் இருப்பதை அவர்கள் அறியாமலிருந்தார்கள். அப்பொழுது இந்த பாடற்குழுவும் மேலே வந்தது, டேவிட் டூப்ளஸிஸ்ஸும் வெளிநாட்டு ஊழியங்களுக்காகக் காணிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தார். அக்குழுவின் பையன்கள் நீண்ட அங்கிகளையும் இன்னும் அப்படிப்பட்டவைகளையும் அணிந்து கொண்டு, அக்குழுவிலிருந்த பெண்களோடு அரட்டை அடித்துக் கொண்டு, ஜோக்குகளைக் கூறியபடி அங்கே வருவார்களானால்... அப்பொழுது ஒருவர் இதோ, நான் பார்வையற்றவன். நான் வெளிநாட்டு ஊழியங்களில் இருக்கிறேன். நான் உங்களுக்கு கூறட்டும்... எனக்காக ஏதாவதைக் கொடுங்கள் என்று கூறி, அவ்விதமாக மேலும் கீழுமாக போய்க் கொண்டிருந்தான். அந்த பாடற்குழுவும் அங்கே வந்து முயன்று... மிகைப்படுத்தி பழக்குவிக்கப்பட்ட குரலில்... பாட முயன்று, கீச்சுக் குரலிலும், உரத்த குரலிலும் பாடும்படிக்கு முயன்றார்கள். அவர்கள் ஷெகினா மகிமையில் இருந்தபடி பாடவில்லை என்று உங்களால் கூறமுடியும். மிகைப்படுத்தி பாடுகிறதை நான் வெறுக்கிறேன், அங்கே வந்து நின்று, தங்கள் மூச்சை அவ்விதமாக இழுத்து அவர்கள்... முகமே நீலமாகிற அளவுக்கு பாடுவார்கள். அது பாடும் விதமே இல்லை. ஆனால் நான் விரும்புகிறது என்ற ஒன்று இருக்குமானால், அதுதாமே அருமையான, பழைமையான, சுதந்திரமான, மறுபடியும் பிறந்து, (தெளிவற்ற வார்த்தைகள்) ஆவியில் பாடுகிற பெந்தெகொஸ்தே பாடலாயிருக்கிறது. அந்த ஒரு இடத்தில் மட்டுமே நீங்கள் எப்பொழுதும் அதைச் செய்ய முடியும். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் அந்த ஷெகினா மகிமையை விட்டு விலகிச் செல்கிறார்கள். அதுதான் மெத்தொடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளையும், பிரஸ்பிடேரியன்களையும், லூத்தரன்களையும், கத்தோலிக்கர்களையும், ஒருத்துவக்காரர்களையும், இருத்துவக்காரர்களையும், மூன்றுத்துவக்காரர்களையும், இன்னும் மற்றெல்லாரையும் ஷெகினா மகிமைக்குள் ஒன்றுகூடி வரும்படிச் செய்கிறது. அந்த ஒரு இடம்தான் உண்மையான ஐக்கியத்திற்கான இடமாயிருக்கிறது. அதன் பின்னாகச் சென்ற எந்த ஒரு ஆணும், பெண்ணும், அதற்குப் பிறகு எந்த ஒரு நபரிடத்திலும் பாகுபாடு காட்டமாட்டார்கள். அவர்களெல்லாரும் சகோதரர்களாக இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள்... இருப்பதில்லை. அவர்கள் ஒரு காரியத்தை மட்டுமே அறிந்திருப்பார்கள், அது அவருடைய இரத்தமாயிருக்கிறது, அதினிமித்தம் தாங்கள் சகோதரர்களாய் இருக்கிறோம் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆமென் (வியூ இப்பொழுது என் உடல் அளவு இரண்டுமடங்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் நான் அவ்வளவாக இரண்டு மடங்கு களிகூரலாம்). 53ஆம், ஐக்கியம். இரத்தத்தின் கீழாக ஐக்கியம். அது மட்டுமே தேவனுடைய தீர்வாக இருக்கிறது. ஸ்தாபனங்கள் நம்மைப் பிரித்துவிடும், கல்வி நம்மை பிரித்துவிடும், விஞ்ஞானம் நம்மைப் பிரித்துவிடும், ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ நம்மை பாவத்திலிருந்து சுத்திகரிக்கும். அவரே வெளிச்சம்; ஷெகினா மகிமையின் வெளிச்சமாயிருக்கிறார்; எனவே நாம் அந்த வெளிச்சத்தில் நடக்கும் போது நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொண்டிருப்போம். ஆமென். திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஒரு மனிதனைப் போல, அவன் திருமணம் ஆனவுடன்... நீங்கள் மூன்று அறை கொண்ட வீட்டில் வசிப்பீர்கள். உங்களுக்கு அது தெரியுமா? ஓ, நீங்கள் கூறலாம், “என்னை மன்னியுங்கள். எனக்கு பத்து அறை இருக்கிறது”. இல்லை நீங்கள் (பத்து அறை) கொண்டிருக்கவில்லை. நீங்கள் மூன்று அறை கொண்ட வீட்டில் தான் ஜீவிக்கிறீர்கள். அது உங்களுடைய... ஒருவேளை உங்களுக்கு மூன்று அல்லது நான்கு படுக்கையறைகள் இருக்கலாம், மூன்று அல்லது நான்கு களஞ்சிய அறைகளைக் கொண்டிருக்கலாம்; இன்னும் அவ்விதமான காரியங்களைக் கொண்டிருக்கலாம்; இருப்பினும் நீங்கள் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் தான் ஜீவிக்கிறீர்கள். அது சமையலறை, வசிக்கும் அறை, படுக்கை அறையாக இருக்கிறது. அது சரியே. நீங்கள் மூன்று அறை கொண்ட வீட்டில் ஜீவிக்கிறீர்கள். தேவனும் மூன்று அறை கொண்ட வீட்டில் ஜீவிக்கிறார் - அது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. நீங்கள் மூன்று அறை கொண்ட வீட்டில் ஜீவிக்கிறீர்கள். அது ஆத்துமா, சரீரம், ஆவியாக இருக்கிறது. 54எனவே, நீங்கள் சமையலறை, வசிக்கும் அறை, படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறீர்கள். அது எதைக் காண்பிக்கிறது? முதலாவது காரியம், நீங்கள் உங்கள் அன்பான மனைவியுடன் பேசுகிறீர்கள், அதுதாமே சமையலறை பாகம் ஐக்கியம் கொள்கிறதாயிருக்கிறது. அது எப்படியிருக்கிறதென்றால் ஒரு மனிதன் சபைக்குள்ளாக வந்து, அவன் பின்பக்கத்தில் அமருவதாக இருக்கிறது. அவன் தேவனுடைய வார்த்தையைக் கேட்க வரும்போது அவன் ஒருவருக்கொருவரிடத்தில் சிறிது ஐக்கியம் கொள்கிறதாய் இருக்கிறது. விசுவாசமானது கேள்வியினால் (hearing) வருகிறது. அடுத்த காரியம், இன்னொரு அறையான உறவாடும் அறையாக இருக்கிறது. ஓ, அநேக மக்கள் நினைப்பது சமையலறைக்கு சென்றுவிட்டால், அவர்கள்... அவ்வளவுதான் என்று. இல்லை! அங்கே நீங்கள் புசிக்க மட்டுமே செய்கிறீர்கள். பாருங்கள், அங்கே உங்களுக்குப் புசிக்க உணவு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அடுத்த அறை உறவாடும் அறை, அங்கே அந்த உறவு கொள்ளும் அறையில், நீங்கள் உங்கள் மனைவியுடன் அன்பு கூறுகிறீர்கள். ஆனால் இப்பொழுது கவனியுங்கள். அநேக மக்கள் அது வரைக்கும் தான் போகிறார்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அடுத்த அறையில் ஐக்கியம் மட்டும் கொள்ளப்படுவதில்லை, ஆனால் அங்கே தான் அந்நியோநிய உறவாடுதலும் வருகிறது. இன்றைக்கு சபையினிடத்திலும் காரியம் அதுவாகத்தான் இருக்கிறது. அவர்கள் வெட்க முகத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள், உங்களால் கூடுமானால் அவர்களிடத்திலிருந்து ஒரு உவமையைக் கற்றுக் கொள்ள முடியும். அவர்கள் தேவனிடத்தில் ஐக்கியம் கொள்வதை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் மிகுந்து, குளிர்ந்து போனதும், பெயரளவில் இருக்கும், மரித்துப்போன ஸ்தாபனத்தையே விரும்புகிறார்கள்; எப்படியெனில் உண்மையிலேயே தேவனுடனான உறவாடுதலுக்குள் வந்து, வெளியே புறப்பட்டு, “அப்பா பிதாவே” என்று கூப்பிடுகிற பிள்ளைகளைப் பெறுவதற்குப் பதிலாக, “நான் பிரஸ்பிடேரியன், நான் மெத்தொடிஸ்டு, நான் பாப்டிஸ்டு, நான் பெந்தெகொஸ்து”. என்று கூறவே விரும்புகிறார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படுகிறார்கள். பவுலும், “நான் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படுவதில்லை, ஏனெனில் விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கேதுவான தேவ பெலனாய் இருக்கிறது”, என்கிறார். அவர்கள் உள்ளே வரும்படிக்கு நாம் அவர்களுக்கு கற்பிக்க முடியாது. அவர்களை இதில் ஸ்தாபனமாக்கவும் முடியாது. விஞ்ஞான முறைமையில் அவர்களை உள்ளே கொண்டுவரவும் முடியாது. ஆனால் அவர்கள் அதில் பிறக்க வேண்டியதாய் இருக்கிறது. அது சரியே. 55ஒரு குழந்தை பிறக்கும் போது, மூன்று மூலகங்கள் குழந்தை பிறக்கும் போது வெளி வருகிறது. முதலாவது வருவது என்ன? (என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள், சகோதரிகளே) எந்தக் காரியம் முதலில் வருகிறது? தண்ணீர். அப்படி அது இல்லாத பட்சத்தில், அது ஒரு வெற்றுப் பிறப்பாயிருக்கும். குழந்தையும் இயல்பான நிலையில் இருக்காது. இரண்டாவது காரியம், இரத்தம். அது சரிதானே? அதற்கு அடுத்த காரியம் என்ன? இயேசுவினிடத்திலிருந்து என்ன வருகிறது? அவர் விலா குத்தப்பட்ட போது தண்ணீர், இரத்தம் மற்றும் ஜீவன்; இயற்கையான பிறப்பில் எவ்விதமாய் இருக்கிறதோ அவ்விதமே ஆவிக்குரிய பிறப்பிலும் இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்து, அது பிறக்கும் போதே மரித்திருந்தால் அவன் அழமாட்டான், அவனிடத்தில் எந்த ஒரு உணர்வும் இருக்காது. அவனுக்கு என்ன நேர்ந்தது? அவன் பிறக்கும்போதே மரித்த குழந்தை. அவ்விதம் தான் இன்றைக்கு இருக்கிற சபைகளிலும் காரியம் இருக்கிறது. நம்முடைய பெந்தெகொஸ்தேயினருக்கு என்ன நேர்ந்தது? நாம் அதிகப்படியான மரித்துப் பிறக்கும் குழந்தைகளையே பிறப்பிக்கிறோம். அது முற்றிலும் சரி. ஆம் ஐயா, அது முற்றிலும் சரியே. எனவே பிறக்கும் பொழுதே அசைவற்ற நிலையிலுள்ள குழந்தையை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனுடைய குதிகால்களை பிடித்து அவனைத் தூக்கி, உயர்த்திப் பிடித்து, உங்களால் எவ்வளவு கடினமாக முடியுமோ அந்த அளவுக்கு அவனுக்குக் கொஞ்சம் ஜீவனைத் தூண்டும் விதத்தில் ஒரு அறைதல் (அடி) பின்பாகத்தில் கொடுங்கள், அது அவனைச் சரி செய்திடும். அவ்விதமே இன்றிரவு சபைக்கு ஏதாவது தேவைப்படுகிறதாய் இருக்குமானால், அது உண்மையான பழம்பாணியிலான பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டு கொடுக்கப்படும் அறைதலாயிருக்கிறது. 56(ஒலிநாடாவில் காலி இடம்) ...அதோடு கூட செய்வதற்கு ஒரு காரியமும் இல்லை. புத்திகெட்ட காரியமாகிய அதினிமித்தம் நம்மை அதிலிருந்து வேறு பிரித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. அது எதை காண்பிக்கிறதென்றால் நீங்கள் இன்னுமாக ஷெகினா மகிமைக்குள் இல்லை என்பதைக் காண்பிக்கிறது. அது முற்றிலும் சரி. நான் சிறு பையனாக இருந்தபோது, நானும் என் சகோதரனும், எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருக்கிற வயல் வெளிக்குச் சென்றோம். அங்கே நாங்கள் ஒரு வயதான சேற்று ஆமையைக் கண்டோம். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமோ அல்லது தெரியாதோ, அவைகள் இங்கே மேற்கு கடலோரங்களில் காணப்படுகிறது. எத்தனை பேருக்குத் தெரியும் ஆமை அல்லது சேற்று ஆமை என்னவென்று? சரிதான். சிறு பிள்ளைகளாகிய எங்களுக்கு அது வேடிக்கையாகக் காணப்பட்டது. அது அவ்வளவு கோரமாகக் காணப்பட்டது. இதோ அதின் பெரிய வளர்ந்த கால்கள், உங்களுக்குத் தெரியும், அப்படியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. நான், “அது அவ்வளவு வேடிக்கையான ஒன்றாகக் காணப்படவில்லையா, சகோதரனே?,” என்றேன். அவன், “ஆம், அவன் அவ்விதம் தான்,” என்றான். நான், “நாம் அதைப் பார்க்கும்படி போகலாம்,” என்றேன். நாங்கள் அப்படிச் செய்தபோது, உங்களுக்குத் தெரியும், அது, இங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் போலச் சென்றது. அது சரியாக தன்னுடைய ஓட்டுக்குள் (ஷப்ப்பு) என்று சென்றுவிட்டது. “ஓ, அந்த பரிசுத்த உருளையரான, சகோதரன் பிரான்ஹாம் தானே, தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கும் நபர் தானே. நீங்கள் தானே அந்த தெய்வீக சுகமளிப்பவர்”. ஓ, வயதான ஆமையே, பாருங்கள். 57எனவே, முதல் காரியம் உங்களுக்குத் தெரியும், நான், நல்லது, ஒரு நிமிடம் பொறு, சகோதரனே. நான் அதை சரி செய்கிறேன்,“ என்றேன். அது நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பினோம், ஆனால் நாங்கள் பார்க்கும்படிக்கு அது நடக்காமலிருந்தது. மரித்தவனைப்போல் அது அங்கேயே அமர்ந்திருந்தது. அவ்விதமாகத்தான் சபையும் செய்திருக்கிறது, “எல்லோரும் உங்கள் பிரஸ்பிடேரியன் ஓட்டுக்குள் (hull), உங்கள் மெத்தோடிஸ்டு, உங்கள் பாப்டிஸ்டு, உங்கள் பெந்தெகோஸ்தே ஓட்டுக்குள் புகுந்து கொண்டீர்கள். வெறுமனே, என்னால் முடியாது... மற்றவர்களோடு நாங்கள் செய்வதற்கென்று ஒன்றுமில்லை” என்று இருக்கிறீர்கள். நான் என்ன கூறினேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான், “நான் சென்று ஒரு பிரம்பைக் கொண்டு வரட்டும். அதைக் கொண்டு என்னால் எவ்வளவு அடிக்க முடியுமோ நான் அதை அடிக்கட்டும். எனவே நான் சென்று, ஒரு பெரிய காற்றாடி வகை மர பிரம்பைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு என்னால் எவ்வளவாக அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு அதை அடித்தேன், ஆனால் அது நகரவே இல்லை. (அதை நீங்கள் அடித்து அவ்விதமாகச் செய்ய வைக்க முடியாது). நான், “நான் உனக்குச் சொல்கிறேன். நான் அவனை சரி செய்து விடுகிறேன்,” என்றேன். எனவே நான் அவனை ஓடையண்டை கொண்டு சென்று, அவனுடைய ஓட்டைப் பிடித்து அவனைத் தூக்கினேன். நான் அவனை தண்ணீரில் மூழ்கடிக்கப் போகிறேன் அல்லது அவன் நடக்க வேண்டும். எனவே நான் அவனை தண்ணீரில் மூழ்கச் செய்தேன், அப்பொழுது தண்ணீரிலிருந்து குமிழ்கள்தான் வந்ததே தவிர வேறெதுவும் நடக்கவில்லை. சகோதரனே, நீங்கள் அவர்களுக்கு மூன்று முறை முன்னுக்கு ஞானஸ்நானம் கொடுத்தாலும், மூன்று முறை பின்னுக்கு ஞானஸ்நானம் கொடுத்தாலும், நான்கு முறை, இன்னும் நீங்கள் விரும்பும் எத்தனை முறை அவர்களை ஞானஸ்நானம் பெறச் செய்தாலும், நீங்கள் காய்ந்த பாவியாக மூழ்கி நனைந்த பாவியாகத்தான் வருவீர்கள். 58ஆனால் உங்களுக்குத் தெரியுமா நான் எப்படி அவனை நகரச் செய்தேன் என்று? நான் சிறு நெருப்பை உண்டாக்கி, அதின் மேல் அந்த பழைய ஆமையை வைத்துவிட்டேன். அப்பொழுது அவன் நகர்ந்தான். அவ்விதமே இன்றிரவு சபைக்கு ஒரு அடியோ அல்லது வேதாகம கல்வியோ அவசியம் இல்லை, ஆனால் பரிசுத்த ஆவி மற்றும் அக்கினி ஞானஸ்நானமே அதற்குத் தேவையாயிருக்கிறது. அதுதான் சபையை நகரச் செய்யும். சபையை சுவிசேஷத்தினால் தீ மூட்டிவிடுங்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் அதின் மேல் தேவனுடைய அக்கினியைக் கொண்டு வாருங்கள். அது அவர்களை நகரச் செய்யும். தேவன் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அதுதான் சபையை நகரச் செய்யும், இரத்தத்தின் கீழே ஏனெனில் இரத்தமே அக்கினியைக் கொண்டு வருகிறதாய் இருக்கிறது. பலியானது அக்கினி மூலமாய் செலுத்தப்படுகிறது. அக்கினி மேல் வைக்கப்பட்ட இரத்தம் புகையை உண்டாக்கி, சுகந்த வாசனையை எழுப்பினது, அது மேலெழும்பி இரட்சகரிடத்திற்குச் சென்றது. சுகந்த வாசனையானது ஜனங்களின் ஜெபமாயிருக்கிறது, அவன் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாக ஜெபித்தபோது, அந்த இரத்தத்தின் வாசனை மேலெழும்பிச் சென்றது. எனவே, இன்றைக்கு பலியானது பரிசுத்த ஆவியினால் சுட்டெரிக்கப்படும் போது... நீங்கள் உங்கள் சொந்த பலியை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் கொண்டு சென்று, உங்களையே பலிபீடத்தின் மேல் கிடத்திக் கொள்ளும் போது, நீங்கள் இரத்தத்தினால் மூடப்படுகிறீர்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதைப் பிடித்து, அதை தேவனுக்கு சுகந்த வாசனையாக அனுப்புகிறார், அதுவே உங்களை ஷெகினா மகிமைக்குள் கொண்டு வருகிறது. அந்த ஒரு இடம் மட்டுமே ஐக்கியத்திற்கான இடமாயிருக்கிறது. ஆமென். 59ஐக்கியம், தேவனுடைய வழியிலான ஐக்கியம். அந்த ஒரே ஒரு வழி மட்டுமே தேவனால் அருளப்பட்ட ஐக்கியத்திற்கான வழி, அதுவே நமக்குத் தேவையாயிருக்கிறது. அதற்குள்ளாகச் செல்வதற்கு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள முடியாது. நம்மை நாமே ஒரு வகையில் உடுத்திக் கொண்டு அதற்குள் செல்ல முடியாது. உங்களை நீங்கள் ஸ்தாபனமாக்கிக் கொண்டும் அதற்குள் செல்ல முடியாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் அதற்குள் பிறக்க வேண்டியதாய் இருக்கிறது; அது உங்களை தெய்வீக ஐக்கியத்திற்குள்ளாகக் கொண்டு செல்லும். எனவே, அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் அந்த ஒளியில் நடக்கும் போது, நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொண்டிருப்போம். மற்றும் தேவனுடைய குமாரனாகிய, “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கிறது,” ஆமென். எப்படி நாம் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்புணர்வை அல்லது இனப்பாகுபாடு வெறுப்புணர்வைக் கொண்டிருப்போம்? நாம் ஸ்தாபன வெறுப்புணர்வை வைத்துக் கொண்டு இன்னும் வெளிச்சத்தில் நடக்கிறோம் என்று எப்படி சொல்லிக் கொள்வோம்? தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக வெறுப்புணர்வை வைத்துக் கொண்டு, அற்புதத்தின் நாட்கள் கடந்து போய்விட்டது என்று எப்படி நாம் கூற முடியும்? தேவனுடைய சொந்த வார்த்தை, ஏனெனில்... நாம் காரியத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது. நீங்கள், “சரி, அது நிறைவேறும்படி என்னால் செய்ய முடியவில்லை. எனவே அதை நான் விசுவாசிக்கப் போவதில்லை?” என்று கூறலாம். அப்படியானால் ஏன் நீங்கள் ஒரு அவிசுவாசி என்று சாட்சி பகரக் கூடாது? இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்,” என்று கூறியிருக்கிறார். எனவே அது காரியத்தை முடித்து வைக்கிறது. அது விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 60அந்த காரணத்தினிமித்தம் நான் பெந்தெகொஸ்தேனாக இருக்கிறேன். அந்த காரணத்தினால் தான் நான் அதை விசுவாசிக்கிறேன், காரணம் நான் அவர்களைக் கண்டுபிடித்தேன்... நான் அநேக இடங்களுக்குச் சென்றிருக்கிறேன்... பெரிய இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். நான் அந்த பெந்தெகொஸ்தே மக்களுடன் சென்றிருக்கிறேன் மற்றும் அங்கே சரியாக வாஷிங்டன் டி.சி.யில் அங்கே துணை ஜனாதிபதி நிக்சன் இன்னும் அநேகர் இருந்தனர். அது அவர்களை ஒரு துளி கூட நிறுத்திவிடவில்லை. தேவனுடைய வல்லமை அவர்கள் மேல் விழுந்தபோது, அவர்கள் கூச்சலிட்டு, தேவனைத் துதித்தார்கள், எவ்விடத்திலும் அது அதே விதமாகத்தான் இருக்கிறது. அவர்கள் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படவில்லை, காரணம் அவர்கள் ஐக்கியத்திற்குள்ளாக இருக்கிறார்கள். அல்லேலூயா! ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறக்கும் போது ஏதோ காரியம் அவனுக்கு நடக்கிறது. மற்றும் அவன் ஷெகினா மகிமைக்குள் கொண்டு வரப்படுகிறான். அவன் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறான். விசுவாசம் அவனுக்குள் வாசம் செய்கிறது. அப்பொழுது அவன் ஆபிரகாமின் குமாரனாகிறான், ஏனெனில் அவன் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் வித்தை ஏற்றுக் கொள்கிறான். ஓ, உலகமே, நீங்கள் மட்டும் அது என்னவென்று அறிந்து கொள்வீர்களானால்! 61அது என்னவென்று நான் உங்களுக்குக் கூறட்டும். நாம் எங்கே தவறு செய்திருக்கிறோம்... இப்பொழுது, (முடிக்கும் தருவாயில்), இதைக் கூறுவதற்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள், நாம் அதை அடையும்படிக்கு நம்மை நாமே ஸ்தாபனமாக்கிக் கொள்ள முயன்றோம், அங்கே தான் நாம் நம்முடைய தவறைச் செய்தோம். நாம் அதைப் பெற்றிருக்கிறோம், மற்றவர்களோ அதைப் பெறவில்லை. மெதொடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும்; மரித்து, குளிர்ந்து போன, சடங்குகளை அவர்கள் கொண்டிருக்கிறார்களே தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் அதை ஜாக்கிரதையாக கவனிக்காத பட்சத்தில், நாமும் மரித்து குளிர்ந்து போன சடங்குகளைக் கொண்டவர்களாகிவிடுவோம், அவர்களோ அதைப்பற்றிக் கொண்டு, கடந்து சென்றுவிடுவார்கள். அது உண்மையிலேயே சரி. நாம் ஜாக்கிரதையாகக் கவனித்து, நம்மை அந்த வழியில் இருக்கும்படி செய்வோம்; காரணம் அவர்கள் வலது, இடது மற்றும் எவ்விடத்திலுமிருந்தும் வருகிறார்கள். இப்பொழுது எபிஸ்கொபலியன்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள், நாம் சுவிசேஷத்துக்குத் திரும்ப வேண்டும். பெந்தெகொஸ்தேவுக்கு நாம் திரும்பியே ஆக வேண்டும். நாம் நம்முடைய சபையில் அந்நிய பாஷைகளைப் பேசுகிறவர்கள் மற்றும் அந்நிய பாஷைகளுக்கு வியாக்கியானம் கொடுக்கிறவர்களையும், தெய்வீக சுகமளிப்பவர்களையும், இன்னும் ஒவ்வொன்றையும் பெற்றிருக்க வேண்டும்,“ என்கிறார்கள். ஓ, சகோதரனே, எப்பேற்பட்ட காரியம்! (நீங்கள் இந்த ஒலிநாடாவை விற்பனை செய்ய வேண்டாம்) 62(ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் ஒரு செய்தியைக் கொடுக்கிறார், அதற்கு இன்னொருவர் வியாக்கியானம் கொடுக்கிறார்: ''... இந்த இரவில், ஆம், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஊழியக்காரனின் முன்பாக உட்கார வைக்கப்பட்டிருக்கிறீர்கள், ஆம், கடந்த காலங்களில் நீங்கள் (தெளிவாக கேட்க முடியவில்லை) செய்தது போல. சந்தேகத்தின் ஆவி உங்கள் இருதயங்களில் நுழையாமல் இருக்கட்டும், ஆம், இது உண்மையிலேயே விலையேறப் பெற்றது, ஆனால் இது உங்கள் மத்தியில் வெளியரங்கமாகும்படிக்கு (Manifest), உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் கொடுத்த, ஒரு உண்மையான களிமண் பாத்திரமாய் இருக்கிறது. எனவே, களிமண் பாத்திரத்தை நீங்கள் பார்க்க வேண்டாம், ஆம், ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தரின் வார்த்தையை விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஷெகினா மகிமையைக் காண்பீர்கள். இந்த சந்தேகம் உங்கள் இருதயத்திற்குள் வர வேண்டாம், ஆம், ஆனால் உங்கள் விசுவாசத்தை கட்டவிழ்த்து, ஒருவரே பரிசுத்தரான, அவர் மேல் விசுவாசம் வைத்து, நீங்கள் நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவை (தெளிவாக கேட்க முடியவில்லை) கூடுமானால் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த இரவில் உங்கள் மத்தியில் நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெளியரங்கமாகி, நிறைவேறச் செய்வார்,“ என்று கர்த்தர் உரைக்கிறார்) ஆமென். நம்முடைய பிதாவாகிய தேவனுக்குத் துதி உண்டாவதாக. ஆமென். இயேசுவே, உமக்கு நன்றி. தேவனுக்கு துதி உண்டாவதாக. ஓ, ஷெகினா மகிமை. தேவனுக்கு மகிமை. ஓ, தேவனே, எங்கள் மேல் அனுப்பும். ஓ, கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்களை எங்களுக்கு அனுப்பும். பசியுடனும், திறக்கப்பட்ட இருதயங்களோடும் உமக்கு முன்பாக காத்திருக்கிறோம். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. கர்த்தாவே, உமக்கு நாங்கள் எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம். ஓ, அது அவ்வளவு அருமையாக இல்லையா? ஏனெனில், சகோதரனே நீங்கள் ஆவியைப் பகுத்தறிதல், தரிசனங்களைப் பற்றி பேசுகிறீர்கள். அது அந்த அளவுக்கு அதே விதமாக இல்லையா? அந்நியபாஷைகளின் வியாக்கியானம் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா? கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் என்ன கூறினார் என்று? ஒருவேளை அந்த இரண்டு மனிதர்களும் ஒருவருக்கொருவர் அறிந்திருக்காமலும் அல்லது ஒருவருக்கொருவர் பார்த்திராமலும் இருக்கலாம். அப்படிஅவர்கள் அறிந்திருப்பார்கள் என்பது அதிக சந்தேகத்துக்குரியதாய் இருக்கிறது. இங்கே அவர்களில் ஒருவர் பாஷையில் பேசுகிறார், இன்னொருவர் அதற்கு வியாக்கியானம் கொடுக்கிறார். அது வார்த்தையோடு ஒத்துப் போகிறது. அவர் எவ்வளவு நேரம் பேசினார் என்று கவனித்தீர்களா? அவர் எப்படியாக தன் பெயரடைகளையும் (adjectives), தன் வாக்கியங்களையும் உபயோகித்தார் என்று? எப்படியாக வியாக்கியானம் வந்தது என்பதை கவனித்தீர்களா? அதே விதமாக, சரியாக அவர் என்ன பேசினாரோ அதே காரியம் வியாக்கியானம் செய்யப்பட்டது. ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் இருக்கிறார். அந்த காரியத்திற்கு நாம் உணர்வற்று இருக்கிறோம். இது எப்பேற்பட்ட காரியம் என்பதை நாம் உணராமலிருக்கிறோம். சகோதரனே, ஓ, எவ்வளவாக அவருடைய சபையின் மேல் தேவன் ஆசீர்வாதங்களைப் பொழிந்திட விரும்புகிறார். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? ஓ, என்னே! இப்பொழுது நான் ஆச்சரியப்படுகிறேன், சற்றுமுன் பரிசுத்த ஆவியானவர் பேசின போது... நான் கடைசியாக சில குறிப்புகளை கூறாதபடிக்கு பரிசுத்த ஆவியானவர் ஏன் என்னை நிறுத்தினார்? நான் இரத்தத்தைக் குறித்து ஒரு காரியத்தைச் சொல்ல இருக்கும் போது, ஏன் அதை கீழே கொண்டு வந்தார்? ஏன் அவர் அதைச் செய்தார்? ஏனென்றால் இந்த வியாக்கியானத்தை அவர் கொடுத்தபடியால், பேசுகிறது அவர்தாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அவர் சாட்சி பகர்கிறார். களிமண் மீது எந்த கவனத்தையும் வைக்க வேண்டாம்; “ஆனால் இந்த செய்தியானது உண்மையாய் இருக்கிறது,” என்று கூறினது. அதுதான் காரியம் ஓ, அல்லேலூயா, தேவனுக்கு துதி உண்டாவதாக. எல்லா கட்டுகளையும் உதறிப் போட்டு, உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள், அப்பொழுது, ஷெகினா மகிமை விழுகிற இடத்தில் நீங்கள் உண்மையிலேயே நுழைய முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம், மெதொடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளையும், பிரஸ்பிடேரியன்களையும், லூத்தரன்களையும், இன்னும் உங்கள் எல்லோரையும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாகக் கூடி வரச் செய்யும், அதுவே ஐக்கியமாயிருக்கிறது. ஆமென். தேவனுக்கு நன்றி, ஓ, சகோதரனே. 63நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் அப்படியில்லை. நான் எங்கே இருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் இந்த கடைசி நாட்களில் இங்கே மேற்கு கடற்கரையில் வார்த்தையை கனப்படுத்துவதை உணர்வது மகிமையாயிருக்கிறது. இந்த வார்த்தை, தேவன் வார்த்தையை கனப்படுத்துகிறார். அது தான் வழி. கவனியுங்கள், அப்பொழுது பெந்தெகொஸ்தே மக்களாகிய நீங்கள் இதை அறிந்து கொள்வீர்கள், பாருங்கள். தேவன் அந்த தரிசனங்களின் வார்த்தையை கனப்படுத்துகிறார். காரணம் அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். நல்லது, அதை வாக்குத்தத்தம் பண்ணின அதே தேவன், தன்னுடைய மக்களுக்கு ஷெகினா மகிமையை வாக்குத்தத்தம் பண்ணினார். பாருங்கள், அதே தேவன் இன்னொரு ரூபத்தில் இன்னொரு ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருகிறார். வியூ! ஆமென்! ஓ, என்னால் முடியுமானால்... ஒவ்வொருவரும் ஒரே இசைவோடு இதைப் பிடித்துக் கொள்ளும் போது, இது அருமையாய் இருக்காதா? ஓ, இது மகிமையாய் இருக்கும்! ஓ, வியாதியஸ்தர் சுகமடைவார்கள், முடவன் நடந்து, ஒரு மானைப் போல துள்ளிக் குதிப்பான், பாவிகள் கல்வாரியை நோக்கி கண்ணீர் விட்டபடி செல்வார்கள், ஷெகினா மகிமையும் எவ்விடத்திலும் விழும். மேலும் இன்றிரவு நாம் வீட்டுக்குக் கூட போக முடியாமல் இருக்கக் கூடும். நாம் இந்த இரவு முழுவதும், நாளை மறுநாள் முழுவதும், அதற்கு அடுத்த நாள் முழுவதும் கூட இங்கேயே தரித்திருக்கலாம். மேலும் நம் மீது வெளிச்சத்தைப் போல பிரகாசிக்க விரும்பும் தேவனுடைய வல்லமையானது, தெருக்களில் எங்கும் குவிக்கப்படும். ஓ, அல்லேலூயா! அதற்காக நான் அவரை எவ்வளவாக நேசிக்கிறேன்! அவருடைய நன்மையும், அவருடைய கிருபையும் என்றுமுள்ளது. அவர் மெய்யாகவே, மெய்யாகவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாய் இருக்கிறார். ஆமென். அது இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறு எவருமில்லை. அவரே ஜீவிக்கிற தேவனின் உண்மையான குமாரனாயிருக்கிறார். அவர் நம்முடைய இரட்சகரும், நம்முடைய சுகமளிப்பவரும், நம்முடைய இராஜாவும், நம்முடைய ஜீவனும், நம்முடைய பிரபுவும், நம்முடைய சந்தோஷமும், நம்முடைய ஆரோக்கியமுமாயிருக்கிறார். அவரே நமக்கு எல்லாவற்றுக்கும் எல்லாமுமாய் இருக்கிறார். எவ்வளவு அருமையாயிருக்கிறது. அவரை யாரிடத்திலாவது சேர்க்கும்படிக்கு; நாம் அவரை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தும்படிக்கு எவ்வளவு வாஞ்சையாய் இருக்க வேண்டும். எவ்வளவு அருமையானது! எவ்வளவு மகிமையானது! அது... 64(ஒரு சகோதரி தீர்க்கதரிசனம் உரைக்கிறார்:) தேவனுக்குத் துதி உண்டாவதாக. ஓ, அருமை, அங்கே அதைக் கூறின அந்த எளிமையான சீமாட்டியைக் கவனியுங்கள், அந்த இனிமையான தோற்றத்தைக் கொண்ட, வயதான சீமாட்டி, அவளுடைய உறைபனி வண்ணம் கொண்ட தலைமயிர், அவள் நித்தியத்திற்குக் கடந்து போகவிருப்பதைக் காட்டுகிறதாய், தனக்குப் பூமியில் அதிக நாட்கள் இல்லை என்பதை அறிந்திருக்கிறாள். நாமும் அதைப் போன்று அந்த வயதுக்கு வரும்போது... அவள் தனக்கென்று பிடித்துக் கொள்ளும்படிக்கு ஏதோ ஒன்று இல்லாதபட்சத்தில், அந்த ஸ்திரீ வேறென்ன கூறியிருக்கக் கூடும்? அது அவளுக்குள்ளிருந்து வெளியே தள்ளிக்கொண்டு வருகிறது. என்னுடைய வேலைக்காரிகள் மேலும், “என்னுடைய வேலைக்காரர்கள் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்”, என்பதை பரிசுத்த ஆவியானவர் தாமே காட்சியில் கொண்டு வருகிறார். ஆம், நண்பர்களே, அது சரியாக தேவனுடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. ஓ, என்னே! அல்லேலூயா! நீங்கள் தாமே அது என்னவென்பதை நீங்கள் மட்டும் பார்க்கக் கூடுமானால், அதில் நீங்கள் களி கூறுவீர்களானால்! ஓ, என்னே! நாம் முதலாவது பாவிகளை பீடத்தண்டை வரும்படிக்கு அழைக்கலாம் என்று நான் விசுவாசிக்கிறேன், நீங்களும் அவ்விதமாக நினைக்கவில்லையா? யாராவது ஒருவர் உடனடியாக பியானோவண்டை செல்லுங்கள். பாவியாகிய நண்பனே, முதலாவது அவருடைய வார்த்தையின் அடிப்படையிலும்; அந்நிய பாஷைகள் பேசப்பட்டு, அதற்கு வியாக்கியானம் கொடுக்கப்பட்டதின் அடிப்படையிலும்; அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த இனிமையான வயதான தாயார் மீது வந்த தீர்க்கதரிசனம் மற்றும் ஒவ்வொருவரும் ஒரே காரியத்தை - அழைக்கிறார், அழைக்கிறார், அழைக்கிறார் என்று பேசுகிற அடிப்படையிலும், நான் உன்னை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அழைக்கிறேன். ஏதாவது காரியத்தை நாம் செய்தாக வேண்டும். நாம் பாடுவோம். (சகோதரனே, உங்கள் பாடல் என்ன?) “நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்”. நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்; நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே எல்லாவற்றையும் உமக்கு, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 65இன்னொரு முறை அவர்கள் அதை இசைத்துக் கொண்டிருக்கையில், நீங்கள் உண்மையிலேயே... உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து கூறுவீர்களா? ஒவ்வொன்றையும் நீங்கள் விட்டுக்கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறீர்களா? பெண்களே, நீங்கள் உங்கள் உலக பாணிகளை கிறிஸ்துவுக்காக விட்டுவிட ஆயத்தமாய் இருக்கிறீர்களா? கனவான்களே, இங்கிருக்கும் புருஷர்களே, நீங்கள் உங்கள் புகைப் பழக்கத்தையும், உங்கள் குடிப்பழக்கத்தையும், உங்கள் சூதாட்டத்தையும், உங்கள் கோட்பாடுகளையும் விட்டு கிறிஸ்துவை அறிந்து கொள்வீர்களா? சபை அங்கத்தினனே, உன்னுடைய கோட்பாட்டை கிறிஸ்துவுக்காக விட்டுக் கொடுப்பாயா? அந்நாளில் உன்னுடைய கோட்பாடு நியாயந்தீர்க்கப்படும்; உன்னுடைய கிறிஸ்துவோ ஏற்றுக் கொள்ளப்படுவார், ஏனெனில் அது மட்டுமே... நீங்கள் எரிச்சலுள்ள தேவனால் நியாயந்தீர்க்கப்படுவீர்கள், ஏனெனில் அவர் தன் சொந்த குமாரனின் இரத்தத்தைத் தவிர வேறொன்றையும் பார்க்கப் போவதில்லை. அந்த ஒரு காரியத்தை மட்டுமே பார்த்து அவர் கடந்து போவார். நீங்கள் இரத்தத்தினால் மூடப்படாமல், ஷெகினா மகிமையில் ஜீவிக்காமல் நீங்கள் எவ்வளவுதான் நல்லவராயிருந்தாலும், எவ்வளவுதான் நீங்கள் உத்தமராய் இருந்தாலும், அந்நாளில் நீங்கள் கைவிடப்படுவீர்கள். அதற்குள்ளாக ஜீவியுங்கள். எனவே இப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுப்பீர்களா? இங்கே மேலேறி வாருங்கள், நான் உங்களுடன் கை குலுக்கி, இங்கே இந்த பீடத்தைச் சுற்றிலுமுள்ள உங்களுடன் சேர்ந்து ஜெபிக்கட்டும். வாருங்கள், சபை அங்கத்தினனே, நீங்கள் யாராயிருந்தாலும், வாருங்கள். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், (சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக)... ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் ஒப்புவிக்கிறேன் (வாருங்கள் பாவியான நண்பனே, வாருங்கள் வெதுவெதுப்பான சபை அங்கத்தினனே, ஷெகினா மகிமைக்குள் வாருங்கள்). நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் ஒப்புவிக்கிறேன், (இப்பொழுது வாருங்கள்,அதுதான் சரி. இப்பொழுதே இங்கே வாருங்கள். வாருங்கள், சபை அங்கத்தினனே, இப்பொழுதே இங்கே வாருங்கள்.) நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே எல்லாவற்றையும் உம்மிடத்தில், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நான் ஒவ்வொரு கோட்பாட்டையும் ஒப்புவிக்கிறேன், கர்த்தாவே, எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். எனக்கு நீர் தேவை. நீங்கள் வரமாட்டீர்களா? அது சரிதான், வாருங்கள், பெண் பிள்ளைகளே. நான் ஒப்புவிக்கிறேன்... நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். (இப்பொழுது நீங்கள் வரமாட்டீர்களா? வாருங்கள்) என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாவற்றையும் உம்மிடத்தில், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 66எத்தனை பேருக்கு பரிசுத்த ஆவி வேண்டும்? இப்பொழுது இவர்களோடு கூட மேலேறி வாருங்கள். மேலேறி வாருங்கள். எல்லாவற்றையும் ஒப்புக் கொடுங்கள். உங்கள் சித்தத்தை ஒப்புக் கொடுத்து, பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்படிக்கு எல்லாவற்றையும் ஒப்புக் கொடுங்கள். அங்கே மாடத்தின் (Balcony) மேல் இருப்பவர்களே கீழே வாருங்கள். கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கும் யாவரும், இங்கே வாருங்கள். இந்த ஷெகினா மகிமை உண்மையானது. வார்த்தையைக் கொண்டும், தேவனைக் கொண்டும் அதற்கு நான் சாட்சி பகர்கிறேன். நண்பர்களே, அது உண்மையானது. உங்களுக்கு வரத் தருணம் இருக்கையிலேயே இங்கே வாருங்கள், சரிதான், அதை நாம் திரும்பவும் பாடும் போது... நான் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன், என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாவற்றையும் உம்மிடத்தில், நான் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன். நான் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன், என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 67ஓ, தேவனுடைய ஆவியானவர் இந்த கட்டிடம் முழுவதும் அசைவாடுவதை உங்களால் உணர முடியவில்லையா? ஊழியக்காரர்கள், இன்னும் யாவரும், இப்பொழுது ஜெபத்திற்காக சூழவரும் போது, இங்கே வந்து, சுற்றி நில்லுங்கள். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். எல்லாவற்றையும் உமக்கே, என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாவற்றையும் உமக்கே ஒப்புவிக்கிறேன். இப்பொழுது ஒவ்வொருவரும் கைகளை உயர்த்தி சற்று தேவனைத் துதிக்கத் தொடங்குவோம். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். எல்லாம் உமக்கே, எனது ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்.